RightClick

கழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள் பகுதி 2





நாகப்பட்டிணத்தைச் சேர்ந்த தம்பதியினர் அவர்கள்!! கணவர் ஒரு கார் விபத்தில் உடல் ஊனமுற்றவராக மாறிவிட்டார்.கால் மூட்டில் ஆணி பொருத்தப்பட்டு,சிறு நகர்வுக்கும் வேறு ஒருவரின் துணை தேவைப்படும் சூழ்நிலை உருவாகிவிட்டது.இன்றைய நவீன மருத்துவம் இவரை வீட்டுச் சிறையில் வைத்துவிட்டது;இந்த சூழ்நிலையில் கழுகுமலைக்கு இந்த கணவரின் மனைவி வந்தார்;அதுவும் நமது 2012ஆம் ஆண்டில் 18 சித்தர்களும் சூட்சுமமாக வருகை தரும் நாளான 28.12.128 அன்று வந்து,நமது ஆன்மீக குருவின் சத்சங்கத்தில் கலந்து கொண்டார்;பிறகு,நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகரின் தலைமையில் கழுகாச்சல மூர்த்தியை கிரிவலமாக வலம் வந்தார்;

வீட்டுக்குச் சென்ற சில நாட்களிலேயே தமது கணவரின் உடல் ஆரோக்கியத்தில் பெரும் மாற்றம் தெரிய ஆரம்பித்ததைக் கவனித்தார்;அது என்னவெனில்,யாருடைய உதவியும் இல்லாமலேயே தாமாகவே எல்லா வேலைகளையும் பார்க்குமளவுக்கு குணமடைந்துவிட்டார்.
நமது முன்னோர்களாகிய 18 சித்தர்களின் சூட்சும வருகையானது இப்படியும் அதிசயம் நிகழ்த்துமா? என்று ஆச்சரியப்பட்டுப் போனார்.


ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ