RightClick

திருச்சி தான் தோன்றீஸ்வரர் கோவிலில் சத்சங்கம்-17.2.13







சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சி உறையூர் சாலை ரோட்டில் அமைந்திருக்கும் அருள்நிறை தான் தோன்றீஸ்வரர் ஆலயத்தில் காலை பத்து மணியளவில் நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் என்ற சிவமாரியப்பன் அவர்கள் தலைமையில் சத்சங்கம்  துவங்கியது.இந்த நிகழ்ச்சியை அருள்நிறை தான் தோன்றீஸ்வரர் ஆலயத்தின் அறக்கட்டளைதாரர் திருமதி.சித்ரா அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.


தான் தோன்றீஸ்வரர் ஆலயத்தின் பெருமைகளைப் பற்றியும்,அவரது அருளைப்பெறும் வழிமுறைகளைப்பற்றியும் நமது ஆன்மீக குரு தெரிவித்தார்.மேலும்,இல்லத்தரசிகள் வீட்டில் இறைவழிபாடு செய்வதன் மூலமாகவே குடும்பச் சிக்கல்களை சரிசெய்யும் தேவரகசியங்களை தெரிவித்தார்.மிகப் பெரிய பிரச்னைகளை மிக எளிய சுய பரிகாரங்கள் மூலமாகவே நீக்கும் வழிமுறையையும் விளக்கினார்.


இந்த ஆலயத்தில்  அஷ்ட பைரவர்களின் சுதை வடிவம் அமைந்திருக்கின்றன.அஷ்ட பைரவர்களின் ஆற்றல்,சக்தி,வழிபடும் முறைகளை வெளிப்படுத்தினார்.

முடிவில் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பாக பிரசாதம் வழங்கப்பட்டது.


பின்னர்,தனிப்பட்டு சந்திக்க வந்திருந்த நமது ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளுக்கு அவர்களின் பிரச்னைகளுக்கு ஏற்ப ஆன்மீக ஆலோசனைகள் வழங்கப்பட்டன.


பின்குறிப்பு: இந்த ஆலயத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சொர்ணதாதேவியுடன் அருள்பாலித்து வருகிறார்;மிகவும் சக்தி வாய்ந்த கால பைரவர் சன்னதியும் கோவிலுக்குள் அமைந்திருக்கிறது;சில நூற்றாண்டுகளுக்கு முன்பு,கர்ப்பிணியாக இருந்த நாக கன்னிக்கு சதாசிவனே மருத்துவச்சியாக வந்து பிரசவம் பார்த்த இடம் ஆகும்.எனவே,ஸர்ப்ப தோஷங்கள்,கருப்பப் பை பிரச்னைகள் தீர இங்கே அமைந்துள்ள அருள்மிகு குங்குமவல்லித் தாயாரை முறைப்படி வழிபட வேண்டும்.இவ்வாறு வழிபடுவதன் மூலமாக,ஸர்ப்ப தோஷங்கள்,புத்திர தோஷங்கள்,திருமணத்தடைகள் முழுமையாக விலகும்.

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ