RightClick

23.2.13 சனி அன்று பாம்புக்கோவில் சந்தையில் ஞான சத்சங்கம்!!!








தமிழ்நாட்டில் இருக்கும் சுமார் ஒரு லட்சம் ஜீவசமாதிகளில் மித மிஞ்சிய சக்தி வாய்ந்த ஜீவசமாதி அருள்நிறை மாதவானந்த சுவாமிகள் ஜீவ ஐக்கியம்,பாம்புக்கோவில்சந்தை,சங்கரன்கோவில் தாலுக்கா ஆகும்.பேருந்து வழியாக இந்த ஜீவசமாதியைச் சென்றடைவது சிரமம்;அடிக்கடி பேருந்து வசதிகள் இல்லை;ஆனால்,ரயில் பயணத்தின் மூலமாக பாம்புக்கோவில் சந்தையைச் சென்றடைவது சுலபம்.(புளியங்குடிக்கும்,சங்கரன்கோவிலுக்கும் இடைப்பட்ட கிராமமே மாதவானந்த சுவாமிகள் ஜீவ ஐக்கியம் ஆகும்;சொந்த வாகனத்தில் வருவோர் புளியங்குடி வந்து,பாம்புக்கோவில்சந்தைக்குச் செல்லும் பாதையை விசாரித்து வருவது நன்று;புளியங்குடியில் இருந்து பதிமூன்று கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கிறது;பாம்புக்கோவில்சந்தை வந்தடைந்ததும்,வெள்ளைப்பிள்ளையார் கோவிலுக்கு எப்படிச் செல்ல வேண்டும்? என்று விசாரித்து வரவும்)
மதுரையிலிருந்து திருமங்கலம்,சிவகாசி,ஸ்ரீவில்லிபுத்தூர்,ராஜபாளையம்,சங்கரன்கோவில் வழியாக செங்கோட்டை செல்லும் பாசன் ஜர் ரயில் மார்க்கத்தில் பாம்புக்கோவில்சந்தை அமைந்திருக்கிறது.காலை பதினொரு மணியளவிலும்,மாலை ஐந்து மணிவாக்கிலும் ரயில் மதுரையிலிருந்து புறப்படுகிறது.

நமது முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய ஏற்ற அமாவாசைகள் மூன்று:  ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை.இந்த மூன்று அமாவாசைகள் வரும் நாட்களிலும் அன்னதானம் செய்வதும்,கூட்டுப் பிரார்த்தனை செய்வதும்,கூட்டு தியானம் செய்வதும்,ஓம்சிவசிவஓம் ஜபித்தவாறு அண்ணாமலை கிரிவலம் செல்வதும் பல லட்சம் கோடி மடங்கு புண்ணியத்தை நமக்குத் தரும்;

வரும் தை மாத அமாவாசையானது 9.2.13 சனிக்கிழமை இரவு வருகிறது.இந்த நன்னாளில் பாம்புக்கோவில் சந்தையில் அமைந்திருக்கும் மாதவானந்த சுவாமிகளின் ஜீவ ஐக்கியத்தில் அவருடைய வருடாந்திர குருபூஜைவிழாவும்,அன்னதானமும் நடைபெற இருப்பதால், நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் என்ற சிவமாரியப்பன் அவர்களின் ஞான சத்சங்கம் 23.2.13 சனிக்கிழமைக்கு (பூசம் நட்சத்திர நாளுக்கு)மாற்றி வைக்கப்பட்டிருக்கிறது. 

இதில் கலந்து கொள்ள விரும்புவோர் அனைவரையும் வருக,வருக என்று வரவேற்கிறோம்.

குறைந்தது ஒரு வருடம் வரை (வருடத்தில் முன்னூறு நாட்கள் வரையிலாவது) தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்திருக்க வேண்டும்;அல்லது குறைந்தது பத்து மாதங்கள் வரையிலும் தினமும் வீட்டில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்திருக்க வேண்டும்;இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை நிறைவேற்றியவர்கள் கண்டிப்பாக இந்த ஞான சத்சங்கத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.இவர்களுக்கு என்று தனிப்பட்ட அடுத்த கட்ட வழிபாட்டு முறை அல்லது தியான முறை போதிக்கப்படும்;

பாம்புக்கோவில் சந்தை மாதவானந்த சுவாமிகள் ஜீவ ஐக்கியத்தில் வருகை தர இருக்கும் அனைவருக்கும் இலவச தங்குமிடம்,குளிக்கும் வசதி,உணவு வசதி செய்யப்பட்டிருக்கின்றன;இந்த ஞான சத்சங்கத்தில் கலந்துகொள்ள இருப்போர் 23.2.13 சனிக்கிழமை இரவு 9 மணிக்குள் வந்துவிட வேண்டும்;24.2.13 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்குள் புறப்பட்டுவிட வேண்டும்;(பெண்களுக்கு தனி தங்கும் இடமும்,குளிக்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன)

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ