RightClick

ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் சத்சங்கம் பகுதி 4



கடக ராசியைச் சேர்ந்த அனைவரும்,அதாவது புனர்பூசம் நான்காம் பாதம்,பூசம்,ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த கடகராசிக்காரர்களில் பலருக்கு திருமணத் தடை அல்லது தொழில் தடை அல்லது வேலையின்மை அல்லது குடும்ப ஒற்றுமையின்மை இருக்கும்;

இப்படிப்பட்டவர்கள் அருள்மிகு வைத்திய நாத சுவாமி கோவிலின் வாசலில் அமைந்திருக்கும் விநாயகர் சன்னதிக்கு வர வேண்டும்.இந்த விநாயகர் சன்னதியானது இங்கிருக்கும் சிவகெங்கை தீர்த்தத்தின் முன்புறம் பழமை மிகுந்த அரச மரத்தினடியில் நாகர்களுடன் இருக்கிறது;இந்த சன்னதிக்கு சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 8 எட்டு மணிக்குள் வருகை தந்து,இந்த மரத்தை ஒன்பது முறை வலம் வர வேண்டும்.ஒன்பதாவது முறையில் பசும்பாலைக் கொண்டு நமது உள்ளங்கை வழியாக பசும்பாலை இந்த ஆலமரத்தின் வேரில் விட வேண்டும்.



இவ்வாறு தொடர்ந்து ஒன்பது சனிக்கிழமை வருகை தந்து இதே போலச் செய்துவிட்டு,கோவிலுக்குள் சென்று முறைப்படி அனைத்து தெய்வங்களையும் வழிபட்டுவிட்டு,நேராக அவரவர் வீட்டிற்குச் சென்றால் அவர்களது நீண்டகாலப்பிரச்னைகள் தீரத் துவங்கும்.அசைவ உணவு சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிடுவோர்களுக்கு விரைவான பலன்கள் கிடைக்கும்.


ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ