RightClick

ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் சத்சங்கம் பகுதி 3





இந்த ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் அமைந்திருக்கும் கன்னி மூலை கணபதி சன்னதியிலும்,உள்பிரகாரத்தில் லிங்கோத்பவருக்கு எதிரே இருக்கும் சிவலிங்கங்களில் வலது நடுவில் இருக்கும் சிவலிங்கத்திலும் சித்தர்களின் அருளாற்றல் நிரம்பியிருக்கின்றன.எனவே,சித்தர்களை தரிசிக்க விரும்புவோர் இந்த ஆலயத்திற்கு வருகை தந்து வெளிப்பிரகாரத்தில் தினமும் ஒரு மணி நேரம் வரை ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ ஜபித்து வர வேண்டும்;இவ்வாறு ஒரு வருடம் முதல் மூன்று வருடம் வரை விடாமல் ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ ஜபித்து வந்தால் உங்களின் முன்னோர்களில் யார் சித்தராக இருக்கிறாரோ அவரது தரிசனமும்,ஆசியும் கிட்டும்;மேலும் அவரே உங்களது இந்தப் பிறவிக்கான ஆன்மீக குருவாக ஆவதற்கு வாய்ப்புகள் உண்டு.
ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ