RightClick

17.02.2013 ஞாயிற்றுக்கிழமையன்று திருச்சியில் நேரடி சந்திப்பு!!!




நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ர வடுகர் என்ற சிவமாரியப்பன் அவர்கள் பிப்ரவரி மாதம் பதினேழாம் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை பத்து மணியளவில் திருச்சி மாநகருக்கு வருகை தர இருக்கிறார்.


நமது வாசக,வாசகிகளில் கடுமையான சிக்கல்கள் உள்ளவர்கள்,நீண்டகால பிரச்னைகளுடன் போராடிக் கொண்டிருப்போர்,தமது வாழ்வில் ஒரு விடியலை எதிர்ப்பார்ப்போர்,ஆன்மீகத்தில் முன்னேற்றம் காணவிழைவோர்,சித்தர் தரிசனத்துக்காக ஆன்மீக முயற்சிகள் மேற்கொள்வோர்,சொந்தத்தொழிலில் முன்னேற்றம் காண உழைப்பவர்கள்,கொடுமையான சோகங்களிலிருந்து விடுபட  விரும்புவோர் நமது ஆன்மீக குருவை இந்த நன்னாளில் சந்திக்கலாம்;


இந்த நன்னாளில் தங்கள் பெயரை நேரில் வருகை தந்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்;முன்பதிவுப்படி சந்திக்க ஏற்பாடு செய்து தரப்படும்;நேரடியாகச் சந்திக்கும்போது ஆசி பெற்றுக்கொண்டு,அவர் சொல்லும் ஆன்மீக வழிமுறைகளை ஒரு குறிப்பேட்டில் குறித்துக் கொள்ள வேண்டும்.அந்த வழிமுறைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக இருக்கும்;அதைப் பின்பற்றி முடித்ததும்,உங்களது கோரிக்கைகள் நூறு சதவீதம் கண்டிப்பாக நிறைவேறியிருக்கும்.கடந்த முப்பது ஆண்டுகளாக பல ஆயிரக்கணக்கானவர்களால் நிரூபிக்கப்பட்ட உண்மை  இது;(கடந்த சில ஆண்டுகளில் ஆன்மீகக்கடல் மூலமாக,சில நூறுபேர்களுக்கும் நிரூபிக்கப்பட்ட நிஜம் ஆகும்.)

முகவரி:ஸ்ரீதான் தோன்றீஸ்வரர் திருக்கோவில்,
85,சாலை ரோடு,உறையூர்,திருச்சி.(வழித்தடம்: சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஆட்டோ,டவுண் பஸ் வசதி இருக்கிறது)
நமது ஆன்மீக குரு அடிக்கடிச் சொல்லுவார்;நீயாக போராடினால் மட்டுமே  நீ விரும்பும் எதையும் குறிப்பிட்ட காலத்திற்குள் அடையமுடியும்.உனக்கு சித்தரே குருவாக அமைந்தாலும்,அவர் நீ விரும்பும் பதவி/சாதனையை பெற்றுத் தர மாட்டார்;ஒருவேளை,நீ அவரை நச்சரித்து நீ விரும்பும் சாதனை அல்லது பதவியை பெற்றுத் தர வைத்தாலும்,அதை உன்னால் வெகு காலத்துக்கு தக்க வைத்துக் கொள்ளவே முடியாது;ஆனால்,உனது சுபாவத்துக்கு ஏற்ற குருவை நீ அடைந்துவிட்டால்,அந்த பிறவியிலேயே நீ ஆன்மீக வாழ்வில் பல படிகளைக் கடந்து உனது லட்சியத்தை அடைந்துவிடுவாய்;அதற்கு நீ செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்: உனது குரு என்ன சொல்கிறாரோ அதை அப்படியே பின்பற்றிக் கொண்டே வர வேண்டும்.இந்த மனோபாவம் உள்ளவர்கள் இந்த நேரடி சந்திப்பில் கலந்து கொள்ளலாம்.(உங்களுக்கு சரியான தீர்வினை ஆன்மீகரீதியில் சொல்லும்  குருவை சந்திக்க வருகிறீர்கள் என்பதை உணருங்கள்)

(இங்கே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர்,ஸ்ரீஸ்ரீசொர்ணதாதேவியுடன் இருந்து அருள்பாலித்துவருகிறார்.இந்த தான் தோன்றீஸ்வரர் ஆலயம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும்)


ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ