RightClick

இன்று மாலை 4 மணிக்குள் . . .



கோவையிலிருந்து நமது வாசகர் ஒருவர் திடீரென நமக்கு இன்று காலை 11.55க்கு போன் செய்தார்.சார்,சூரியனைச் சுற்றிலும் ஒரு வட்டம் தெரியுது;அதுக்கு என்ன அர்த்தம்? என்று கேட்டார். “மேலிடத்தில் கேட்டுச்சொல்கிறேன்”என்றேன்.அவர் ஆர்வத்தோடும்,பாசத்தோடும் ஆன்மீகக்கடல்ல போட்ருவீங்கல்ல என்றார்.போட்ருவோம் என்றுகூறிவிட்டு,நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களிடம் அலைபேசியில் விளக்கம் கேட்டோம்.சுமார் 10 நிமிடம் கழித்து அழைத்தார்.


“22 வருடங்களுக்கு ஒருமுறை இப்படி சூரியனைச் சுற்றிலும் மூன்று வண்ணங்களைக் கொண்ட ஒளிவட்டம் உருவாகும்;இந்த ஒளிவட்டத்திலிருந்து ஒருவித தெய்வீக காந்த ஆற்றல் உருவாகி,இன்று முழுவதும் பூமியை நோக்கி பாய்ந்துகொண்டே இருக்கும்.


அம்மன் உபாசகர்கள்,சகஸ்ரவடுகர் ஐயா அவர்களை நேசிப்பவர்கள் இருவருமே இன்று மாலை 4 மணிக்குள் வானில் சூரியன் அல்லது சூரியனைச் சுற்றி இருக்கும் இந்த ஓளிவட்டத்தை நோக்கி நிற்க வேண்டும்;சுமார் 2 நிமிடம் வரையில் நின்று நமது நியாயமான கோரிக்கைகளைச் சொல்ல வேண்டும்.(மனதுக்குள் அல்ல;நாம் பேசுவது போல!)அப்படிக் கேட்டால் வெகு விரைவில் நமது கோரிக்கை நிறைவேறும்”


ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ