RightClick

இதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 9




ஒரு தம்பதியினர் நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களை சந்திக்க வந்திருந்தனர்;இருவரின் முகங்களிலும் சோகமும்,எதிர்காலத்தைப்பற்றிய பயங்களும் தென்பட்டன.விரக்தியாகப் பேசினார்கள்.அந்த தம்பதியருக்கு ஒரே ஒரு மகள் இருக்கிறாள் என்பதும்,அந்த தம்பதியில் அந்த பெண் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார் என்பது தெரிந்தது.
எனக்கு அரசுப் பள்ளியில் ஆசிரியை பணி கிடைக்குமா? என்று அந்த பெண் கேட்டார்.
சில நிமிடங்கள் தியானத்தில் இருந்து வந்துவிட்டு,நமது ஆன்மீக குரு சொன்னார்:
உங்களுக்கு நிச்சயமாக அரசுப்பணி கிடைக்கும்;நீங்கள் ஆசிரியையாக ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் வேலைக்குச் சேர்வீர்கள்.அதற்கு இன்று முதல் 1 வருடம் 4 மாதம் வரை காத்திருக்கவும்
பிறகு,அந்த பெண் கேட்டார்:எனது மகளை நாங்கள் சாஃப்ட்வேர் என் ஜினியராக்க விரும்புகிறோம்;தற்போது சுமாராகப் படிக்கிறாள்;இப்படிப் படித்தால் எங்கள் எண்ணம் எப்படி நிறைவேறும்? அவள் நன்றாகப் படிக்க வைக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும்?
“உங்கள் மகள் இப்போது என்ன படிக்கிறாள்?”
“ஒன்பதாம் வகுப்பு!”
“உங்கள் மகள் அடுத்த வருடம் முதல் நன்றாகப்படிப்பாள்;அவள் சாஃப்ட்வேர் என் ஜியர் ஆக மாட்டாள்;டாக்டர்படிப்பான எம்.பி.பி.எஸ்.,தான் படிப்பாள்”
“(ஆச்சரியமாகி)சாமீ!அவளை சாஃப்ட்வேருக்கு படிக்க வைக்கவே நாங்கள் கடன் வாங்க வேண்டியிருக்கு;எப்படி டாக்டருக்குப் படிப்பாள்?”
“அடுத்த வருடம் முழு ஆண்டுத் தேர்வுமுடிவு வந்தப்பின்னர் என்னை வந்து சந்தியுங்கள்” என்று கூறினார் நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள்.
ஒரு வருடம் 4 மாதங்கள் ஆனது;ஆசிரியைத்தேர்வுப் பட்டியலை கல்வித்துறை வெளியிட்டது;இந்தப் பெண்மணியும் அரசு ஆசிரியைப்பணிக்கு விண்ணப்பித்திருந்தார்;அதற்குரிய நேர்காணலுக்குச் சென்றிருந்தார்.ஆசிரியர்,ஆசிரியைகளுக்கான முதல் தேர்வுப்பட்டியல் வெளியானது.அதில் அவருடைய பெயர் இல்லை;
உடனே,அந்த குடும்பம் நமது குருவை நேரில் சந்தித்தது;
“முதல் பட்டியலில் எனது பெயர் இல்லை சாமீ! இந்த வேலை கிடைத்துவிட்டால்,எங்கள் வாழ்க்கை செட்டில் ஆகிவிடும்”என்று வேண்டினர்.
“உங்களுக்கு நிச்சயமாக அரசுஆசிரியைப்பணி கிடைக்கும்.இரண்டாவது தேர்வுப்பட்டியலில் உங்கள் பெயர் இருக்கும்.பொறுமை காக்கவும்” என்றார்.
மூன்று மாதங்கள் கடந்தன;அடுத்த பட்டியல் வெளியானது.அதில் இந்த பெண்மணியின் பெயர் இடம்பெற்றிருந்தது.வேலை நியமன ஆணையுடன் நமது ஆன்மீக குருவை அந்த குடும்பம் வந்து சந்தித்து ஆசி பெற்றது.
மூன்று ஆண்டுகள் ஆயின;அவர்களின் மகள் மிகச் சிறப்பாக +2 படிப்பை முடித்து மெரிட்டிலேயே எம்.பி.பி.எஸ். படிப்புக்குத் தேர்வானார்.அந்தக் குடும்பத்துக்கு ஆனந்தக்கண்ணீர்!!!
மீண்டும் குடும்பத்தோடு வருகை தந்து எம்.பி.பி.எஸ் சேர்க்கைக்கான கடிதத்துடன் வந்து தட்சிணை கொடுக்க பணம் கொண்டு வந்தனர்.அதை நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள் வாங்காமல் அவர்களை அனுப்பி வைத்துவிட்டார்.
பணத்துக்கு மிஞ்சிய சக்திகள்,
பணத்தை விட வலிமை மிக்க சக்திகள்,
பணத்துக்கு அடிமையாகாத மனிதர்கள்
இந்த காலத்திலும் உண்டு.அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது கடினம்.ஏனெனில்,நாம் அப்படிப்பட்ட மனிதர்களைக் கண்டறியும் ஆத்மத்திறன் நம் அனைவருக்கும் இருக்கிறதா?
ஒரு சிலருக்கே இருக்கிறது.அப்படி இருப்பவர்களே தமது வாழ்க்கையை வளப்படுத்திக்கொள்ள முடியும்.
ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ