RightClick

இதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 8




பெரிய சிவகாசியாக ஜப்பான் இருப்பதால்,குட்டி ஜப்பானாக சிவகாசி இருக்கிறது.எத்தனை குடும்பங்கள் பிழைக்க வந்தாலும்,இங்கே உடனே வேலை கிடைத்துவிடும்.இங்கே சுமார் 1500 மறுதோன்றி(OFFSET PRINTERS)அச்சகங்களும்,1000 தீப்பெட்டித்  தொழிற்சாலைகளும்,1000 பட்டாசுத்தொழிற்சாலைகளும் இருக்கின்றன.தமிழ்நாட்டிலேயே அதிகமான அளவுக்கு கலால் வரி வசூலாகும் ஒரே ஊர் நம்ம சிவகாசிதான்.

இங்கே ஒரு தொழிலதிபர் வெளிநாட்டிலிருந்து மிகவும் நவீனமான லித்தோ பிரஸ் மற்றும் பல வண்ண அச்சு இயந்திரங்களை நிறுவியிருக்கிறார்.திறப்பு விழா முடிந்த மறுநாள் முதல் 6 ஆண்டுகளுக்கு அந்த நவீன அச்சகம் செயல்படாத அளவுக்கு அவருடைய தொழில் போட்டியாளர்கள் ‘ஏதோ’செய்துவிட்டனர்.6 ஆண்டுகளுக்குப் பின்னர்,நமது ஆன்மீக குரு சிவமாரியப்பன் அவர்களை சந்தித்தனர்.
இந்த 6 ஆண்டுகளில் இந்த நவீன அச்சகத்தை இயங்க வைக்க அவர்கள் செய்த பூஜைகள்,யாகங்களையும் அதனால் ஏற்பட்ட செலவுகளையும் பட்டியலிட்டனர்.அவைகளை கவனமாகக் கேட்டுக்கொண்ட நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர்(செல் எண்:9677696967)ஒரு குறிப்பிட்ட நாளன்று அந்த நவீன அச்சகத்துக்கு வந்தார்.
சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்தார்.
“நாளை முதல் உங்கள் அச்சகம் பிஸியாக இருக்கும்”என்று கூறிவிட்டு புறப்பட்டுவிட்டார்.
அவர் புறப்பட்டுப்போன சில மணித்துளிகளில் அந்த அச்சகத்தில் வேலை கேட்டு ஆட்கள் வரத்துவங்கினர்.மறுநாளிலிருந்து அந்த அச்சகம் செயல்படத்துவங்கியது.இந்த சம்பவம் 2002 இல் நிகழ்ந்தது.
ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ