RightClick

இதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 6



25.3.2012 அன்று திரு அண்ணாமலையில் தெய்வீக ஆகர்ஷண விபூதி தயாரித்தலும்,அதைப் பயன்படுத்தும் முறையும் என்ற தலைப்பில் நமது ஆன்மீகக்கடல் அறக்கட்டளை சார்பில் ஆன்மீகப்பயிற்சி வகுப்பினை நடத்தினோம்.தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏராளமான வாசக,வாசகிகள் கலந்துகொண்டனர்.

இந்த பயிற்சி வகுப்பில் எப்படி தெய்வீக ஆகர்ஷண விபூதி தயாரிப்பது? அதை எப்படி முறையாக பயன்படுத்துவது? என்பதைப்  பற்றிய நேரடிச் செயல்முறை விளக்கம் பயிற்சியளிக்கப்பட்டது.இந்த பயிற்சிவகுப்பில் கலந்து கொண்ட பல வாசக,வாசகிகள் தங்களின் அனுபவங்களை தொடர்ந்து நம்மிடம் பகிர்ந்து கொண்டுவருகின்றனர்.அவற்றில் சில அனுபவங்களை உங்களிடம்  பகிர்ந்துகொள்வதில் பெருமை கொள்கிறோம்:


அவர் மிகவும் திறமையான இளைஞர்! அவரது திறமையை எப்போதும் தான் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அவருக்கு ஒரு பெரிய செல்வந்தர் கடன் கொடுத்திருக்கிறார்.வாங்கிய கடனுக்கு வட்டியை கொடுக்கச் செல்லும்போதெல்லாம் வட்டியை வாங்காமல் அந்த திறமையான இளைஞரை திருப்பி அனுப்பியதோடு அல்லாமல்,அவரைப் புகழ்ந்து பேசியிருக்கிறார்.அவருடைய காட் பாதர் தானே என்ற அளவுக்குப் பேச அந்த இளைஞரும் அதை நம்பிவிட்டார்.கடந்த 4 வருடங்களில் அந்த திறமையான இளைஞரது கடன் ஏழு இலக்கத்தைத் தொட்டுவிட்டது.(ரூ.10,00,000 முதல் ரூ.99,99,999 வரையிலான எண்ணிக்கையை ஏழு இலக்கம் என்று சொல்வதுண்டு)இப்போதுதான் அந்த இளைஞருக்கு புரிந்தது;தான் நவீன கொத்தடிமையாக மாறியிருக்கிறோம் என்று! அதிலிருந்து எப்படி மீள்வது?என்று யோசித்திருக்கிறார்.நமது தெய்வீக ஆகர்ஷண விபூதி தயாரிப்பு ஆன்மீகப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டார்.இதில் கிடைத்த பயிற்சியை சுமார் 60 நாட்களுக்கு தினமும் செய்துவந்திருக்கிறார்.அவரது மொத்த கடனும் தீர்ந்துவிட்டது.இப்போது அவருக்கு மகிழ்ச்சிதாங்க வில்லை;



அந்த பெண்மணி ஒரு இல்லத்தரசி! அவருக்கு தனது குலதெய்வத்தின் மீது அளவற்ற பக்தி உண்டு.மிக நீண்டகாலமாக தனது குல தெய்வத்தை நேரடியாக சந்தித்துப் பேச வேண்டும் என்ற ஏக்கம் உண்டு.(அவரது பிறந்த ஜாதகமும் அதை உறுதிபடுத்துகிறது!)நமது தெய்வீக ஆகர்ஷண விபூதி தயாரித்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டார்;அதில் கூறப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றத் துவங்கினார்;வெறும் 45 நாட்களிலேயே தனது குல தெய்வத்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றிருக்கிறார்.தனது குடும்பப் பிரச்னைகளைத் தீர்க்குமாறு வேண்டிட,தற்போது வாரம் ஒருநாள் தனது குல தெய்வத்திடம் பேசிக்கொண்டிருக்கிறார்.ஒவ்வொரு வாரமும் நேரடியாகவே அவரது குல தெய்வம் அவரது படையலை ஏற்றுக்கொள்கிறது என்பதில் அவருக்கு பெருமகிழ்ச்சியாகிவிட்டது.மேலும் அவரது குடும்பத்தில் ஓவ்வொரு பிரச்னையாகத்  தீரத் துவங்கியிருக்கிறது.அவரது அனுமதியோடும், அவரதுகுல தெய்வத்தின் ஆசி மற்றும் சம்மதத்தோடும்,நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களின் அனுமதியோடும் இந்தப் பதிவு வெளியிடப்படுகிறது.


பக்கத்துவீட்டினர் எதற்கெடுத்தாலும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கின்றனர்.இந்த சூழ்நிலை கடந்த 6 வருடங்களாக இருந்து வரும் ஒரு இல்லத்தரசியானவர்,நமது தெய்வீக ஆகர்ஷண விபூதியைப் பயன்படுத்தத் துவங்கியதோடு,தெய்வீக வழிமுறையைப் பின்பற்றத்துவங்கிய பின்னர்,அந்த சண்டை நிரந்தரமாக நின்றுபோனது.நமது ஆன்மீகக்கடல் வாசகிக்கு சந்தோஷம் தாங்க வில்லை;தற்போது அவரது குடும்பமே தினமும் சிவமந்திரம் ஜபிக்கத் துவங்கியிருக்கிறது.இந்த வருடம் நிறைவடையும் முன்பு(31.12.2012க்குள்)அவரது ஊரில் 100 பேர்களை தினமும் சிவமந்திரம் ஜபிக்க வைக்கிறோம் என்று வாக்குறுதி கொடுத்துள்ளனர்.

ஆன்மீகக்கடல் ஆரம்பித்ததன் நோக்கம் நிறைவேறிக்கொண்டிருக்கிறது.

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ