RightClick

இதுதான் உண்மையான ஆன்மீகச்சேவை-13



கேரளமாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் ஒரு கிருஸ்தவ மிஷன் மருத்துவமனையில் ஒரு கன்னியாஸ்திரி சுமார் 1 மாதமாக கோமா நிலையில் இருந்தார்.இதனால் அவரது பொறுப்பில் இருந்த ஒரு பள்ளியின் புதிய கட்டிடம் முழுமையாகக் கட்டப்படாமல் இருந்தது.இந்த நிலையில் நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களிடம் அந்த        கன்னியாஸ்திரியின் வயதான பெற்றோர்கள் வந்தனர்.இந்த கோமா நிலையை விடுவிக்கும்படி வேண்டினர்.


அவர்களிடம் திருவனந்தபுரம் மிஷன் மருத்துவமனையில் இருக்கும் கன்னியாஸ்திரியின் கையில் ஒரு ருத்ராட்சத்தை கொடுக்கும்படி அவரை கவனிக்கும் நர்ஸிடம் அறிவுறுத்தப்பட்டது.அவ்வாறு கொடுத்து அந்த கணத்தில் அந்த கோமா நிலையில் இருக்கும் கன்னியாஸ்திரியின் காதில் நமது ஆன்மீககுரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களுடைய பேச்சினை செல்போன்  மூலமாக கேட்கும் விதமாக வைக்கச் செய்தார்கள்.டெலிபதி + ஹீலிங் கலந்த இந்த சிகிச்சையின் மூலமாக அந்த கன்னியாஸ்திரியானவர் 48 மணி நேரத்திற்குள் கோமா நிலையிலிருந்து மீண்டார்.


அந்த கன்னியாஸ்திரியின் பெற்றோர்களின் ஆனந்தத்துக்கு அளவே இல்லை;அவர்கள் கொடுத்த அன்பளிப்பை பெற்றுக்கொள்ளாமல் அவர்களை அனுப்பி வைத்துவிட்டார் நமது ஆன்மீக குரு!


இன்று அந்த கன்னியாஸ்திரியின் கனவுப்பள்ளியானது முழுமையாகக் கட்டிமுடிக்கப்பட்டு திறக்கப்பட்டுவிட்டது.


ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ