RightClick

இதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 11



ஸ்ரீவைகுண்டம் என்னும் ஊர் திருச்செந்தூருக்கு அருகில் இருக்கிறது.இங்கே கைலாசநாதர் திருக்கோவில் இருக்கிறது.இந்தக் கோவில்தான் சித்தர்களால் உருவாக்கப்பட்ட திருநள்ளாறு ஆகும்.ஆமாம்! நவக்கிரகங்களில் சனியினால் ஏற்படும் துயரங்களான ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,பாதச்சனி போன்றவைகளைத் தீர்க்க இந்த சிவாலயத்துக்கு சனிக்கிழமை மாலை 5 முதல் 7 மணிக்குள் வந்து வழிபட்டால் சனிதோஷம் விலகும்.
இந்த ஊரில் இருந்து ஒரு தம்பதியினர் தமது 5 குழந்தைகளோடு நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களை சந்திக்க முன் அனுமதி பெற்று வந்திருந்தனர்.இந்தக் குடும்பம் ஒரு சாலையோர உணவகம் நடத்தி வந்தனர்.7 ஆண்டுகளில் இவர்களுக்கு கடன் ரூ.40,00,000/-ஆக உருவாகிவிட்டது.இவர்களிடம் இருக்கும் மொத்த சொத்துக்களை விற்றாலே ரூ.20,00,000/-தான் தேறும்.இவர்களின் பூர்வ ஜன்மங்களை நமது ஆன்மீக குரு  திரு.சகஸ்ரவடுகர் அவர்கள் ஆராய்ந்து பார்த்ததில் இவர்களில் அனைவருக்குமே அதாவது கணவன்,மனைவி இருவருக்குமே கடுமையான பித்ரு தோஷம் இருப்பது தெரிந்தது.எனவே,இவர்களுக்கு  நவகலசயாகம் செய்வது அவசியம்;அவசரம் என்று உபதேசித்தார்.
அந்த தம்பதியரோ எங்களுடைய கடன்கள் தீர்ந்தால் போதும்;நாங்கள் கவுரவமாக வாழ விரும்புகிறோம் என்று வேண்டினர்.
இருவருக்கும் ஏற்ற நன்னாளில்  நவகலசயாகம் செய்யப்பட்டது.அவ்வாறு செய்து முடித்த 27 வது நாளில் அவர்களின் பண்ணண நிலமானது ரூ.40,00,000/-க்கு விற்பனை ஆனது.அவர்களும் தங்களின் கடன்களை அடைத்துவிட்டு,இன்று சிறிய அளவில் உணவகம் ஊருக்குள் நடத்திக்கொண்டிருக்கின்றனர்.


இன்று வரையிலும் அவர்கள் குருதட்சிணையாக தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து கொண்டிருக்கின்றனர்.
அவர்களுடைய கர்மாவை நீக்கிட அவர்களே பணம் செலுத்தி பூஜைப்பொருட்கள் வாங்கி வந்தார்கள்.இவர்களிடம் வேறு எதுவும் பணமாகப்பெற வில்லை;இந்த சம்பவம் 2008இல் நிகழ்ந்தது;

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ