RightClick

இதுதான் உண்மையான ஆன்மீகச் சேவை பாகம் 10



ஒரு 45 வயது நபர் நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களை சந்திக்க வந்தார்.தன்னை கல்வித்துறை அதிகாரி என்று அறிமுகப்படுத்திக்கொண்டார்.தனக்கு சொந்த ஊர் பரமக்குடி என்றும்,தற்போது தான் தென்காசியில் பணிபுரிவதாகவும்,தனது வேலையில் அதிக மன அழுத்தம் உண்டாவதாகவும் கூறினார்.
அவர் தனக்கு தனது சொந்த மாவட்டத்துக்கு இடமாறுதல் கிடைத்தால் போதும் என்று தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.
சில நிமிடங்கள் அவரைப்பற்றி தியானித்த நமது ஆன்மீக குரு அவர்கள்,
நீங்கள் ஒரு நாளுக்கு 108 முறை வீதம் ஓம்சிவசக்திஓம் ஜபித்து வாருங்கள்;இப்படி உங்களுக்கு விரும்பும் இடத்துக்கு மாறுதல் வரும்வரையிலும் தினமும் ஜபித்து வர வேண்டும்;அதே சமயம் இந்த ஜபத்தை ஜபிக்கும் நாட்களில் நீங்கள் அசைவம் சாப்பிடக்கூடாது என்பதையும் நினைவுபடுத்தினார்.
59 வது நாளில் அந்த கல்வித்துறை அதிகாரிக்கு அவர் விரும்பும் மாவட்டத்திலேயே,அவரது சொந்த ஊரிலேயே மாறுதல் சற்றும் எதிர்பாராமல் கிடைத்தது.அவருடன் பணிபுரிபவர்கள், ‘என்ன சார்,உங்க கொள்கையை தளர்த்தீட்டீங்களா?’என்று ஆச்சரியத்துடன் விசாரித்தார்கள்.இருந்தும் கூட நமது கல்வித்துறை அதிகாரி   ஒரு புன்னகையை பதிலாகச் சொல்லிவிட்டார்.
ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ