RightClick

இதுதான் நிஜமான ஆன்மீகச் சேவை பாகம் 3



ஒரு இஸ்லாமியத் தம்பதியினருக்கு திருமணமாகி,15 ஆண்டுகளாக குழந்தையில்லாமல் இருந்தது.ஒரு நண்பர் மூலமாக நமது ஆன்மீக குரு சகஸ்ரவடுகர் அவர்களை வந்து அந்த இஸ்லாமியத்  தம்பதியினர் சந்தித்தனர்.


அந்த தம்பதியர் இருவர்களின்  பிறந்த நேரப்படி பித்ரு தோஷம் இருப்பது அவ்ர்களைப் பார்த்ததும்,திரு.சகஸ்ரவடுகர் அவர்களுக்குத் தெரிந்தது.ஆனால்,அவர்களுக்கு பிறந்த ஜாதகங்கள் இல்லை;இந்த பித்ரு தோஷம் இருப்பதைப்பற்றி அந்த இஸ்லாமியத்தம்பதியிடம் சகஸ்ரவடுகர் அவர்கள் எடுத்துரைத்தார்கள்.

(ஜோதிடப்படி,திருமணப்பொருத்தம் மட்டும் பார்த்து இக்காலத்தில் திருமணம் செய்வது தவறு;வரதட்சிணை அடிப்படையில்  திருமணம் செய்விப்பதும்தவறு;         வேறு தோஷங்கள் இருக்கின்றனவா? அப்படி இருந்தால்,அந்த தோஷங்களை நிவர்த்தி செய்துவிட்டார்களா? என்பதையும் பார்க்க வேண்டும்.

ஒரு தம்பதியினரின் பிறந்த ஜாதகத்தில் கணவன் அல்லது மனைவிக்கு பித்ரு தோஷம் இருந்தாலே,அவர்களுக்கு குழந்தைபாக்கியம் கிடைக்காது;அல்லது மிகவும் தாமதமாகக் கிடைக்கும்;


அவர்களோ எங்களுக்கு ஒரே ஒரு குழந்தையாவது வேண்டும்.நீங்கள்தான் எங்கள் ஆன்மீக குருவாக இருந்து,வழிகாட்ட வேண்டும் என்று மன்றாடி,தங்களுடைய கடந்த கால மருத்துவரீதியான முயற்சிகளையும்,ஆன்மீக ரீதியான தேடுதல்வேட்டையையும் விவரித்தார்கள்.


ஐயா சகஸ்ரவடுகர் அவர்களின் மேற்பார்வையில் செய்த சுயபரிகாரத்தினால்,பரிகாரம் செய்து முடித்த 60 நாட்களில் அந்த இஸ்லாமியப் பெண் கருவுற்றார்.குழந்தை பிறந்து சில மாதங்களுக்குப்பிறகு,குழந்தையோடு நமது ஆன்மீக குரு சகஸ்ரவடுகர் அவர்களை சந்தித்து,குழந்தைக்கு ஆசி பெற்றனர்.ஆசி பெற்ற கையோடு,தங்கள் ஆண் குழந்தைக்கு  பெயர் வைக்கக் கோரினர்.சிவமுகமது என்று பெயர் சூட்டப்பட்டது.இந்தப் பெயரை அவர்களின் ஜமா அத்தும் ஏற்றுக்கொண்டது.


ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ