RightClick

மலேஷியா மற்றும் சிங்கபூரில் இருக்கும் பைரவ வழிபாட்டு மையங்கள்


பைராகி ஸ்ரீ.வி.மதியழகன் சுவாமிகள் தன்னுடைய இல்லத்தில் அஷ்ட பைரவர்களையும் எழுந்தருளச்செய்து,பைரவ எந்திரங்களையும் பிரதிஷ்டை செய்து ஆத்மார்த்தமான நித்திய பூஜைகளை செய்து வருகிறார்.பலருடைய வியாதிகளைத் தீர்த்தும்,பலருக்கு நல்ல வேலை வாய்ப்புகளையும் இங்குள்ள பைரவர் வழங்கி அருள் பாலித்து வருகிறார்.
இங்கு வந்து பைரவரை வழிபடுகின்றவர்களுக்கு அஷ்ட ஐஸ்வர்யங்களும் நிறைவாக அமைவதால்,இந்த பைரவ மையத்தைத் தேடிவரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.


மேலும் விபரங்களுக்கு:பைராகி ஸ்ரீ.V.மதியழகன் சுவாமிகள்
232 A,#03-123,Serangoon Ave 2,Singapore-551232.
Ph;0065-97855243/96533317.


மலேஷியாவில் கம்போங் படாங் ஜெயாவில் அருட் திரு.ரோமரிஷி சித்தர்,மணி ,மந்திர,ஒளஷத ஆசான் ஈசான சிவசுப்பிரமணிய சுவாமிகள் ஸ்ரீகாக புஜண்ட தபோவன ஆஸ்ரமத்தில் ஸ்ரீசொர்ண கால பைரவரை எழுந்தருளச் செய்திருக்கிறார்.சுவாமிகள் பல்லாண்டுகள் கொல்லிமலை குகைகளிலும் ஸ்ரீகாகபுஜண்ட ஆதீனத்திலும் நெடுங்காலம் தவம் செய்து அஷ்டமாசித்தி பெற்ற பைரவ உபாசகர்.
இங்கு வந்து தரிசிப்பவர்களுக்கு அஷ்ட ஐஸ்வர்யங்களும் வேண்டிய நலன்களும் நிறைவாக அமைகின்றன.மெய்ஞான பீடமாக திகழ்கின்றது.பவுர்ணமி, அஷ்டமி தினங்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
மேலும் விபரங்களுக்கு:


SRI KAGABUJANDAR THABOVANAM ASHRAM CHINNA ADHINAM SOCIETY,
NO:391,2498,Jalan Muhibbah,Kampung,Padang Jawa
PO 1300 Klang,Fel.Malaysia.
Ph:0355420067.HP:012 2320287
நன்றி:பைரவ ரகசியம்,பக்கங்கள் 145,146.