RightClick

ஆன்மீகக்கடல் அறக்கட்டளை நடத்தும் ஆன்மீகவகுப்பு 1:3 இப்போது கோவையில்!!!




திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஆயுட்காலசீடர் திரு.சிவமாரியப்பன் அவர்கள் ஆன்மீகம் ஒரு அறிமுகம்,ஜீவசக்தி வாய்ந்த விபூதி தயாரிப்பு முறையும்,அதை பயன்படுத்தும் விதமும் என்ற தலைப்பில்  ஆன்மீகப் பயிற்சி வகுப்பு நடத்திட சம்மதம் தெரிவித்துள்ளார்கள்.
இந்த வகுப்பானது 26.5.2012 சனிக்கிழமை காலை 10 மணியளவில் கோவையில் நடைபெற இருக்கிறது.மிக முக்கியமான ஆன்மீகப் பெரியவர்களின் ஆசியோடும்,மிகச்சிறந்த பேராசிரியர்களின் முன்னிலையிலும் இந்த ஆன்மீகப்பயிற்சி வகுப்பு நடைபெற இருக்கிறது.இரண்டு மணி நேர வகுப்பில் கலந்து கொள்ள  குருதட்சிணை உண்டு.

 இந்த ஆன்மீகப் பயிற்சி வகுப்பில்  21 வயதுக்கு மேற்பட்ட எவரும் கலந்து கொள்ளலாம்.108 மாணவ,மாணவிகளுக்கு மட்டுமே இந்த வகுப்பில் கலந்துகொள்ள அனுமதி!!!

இந்த  ஆன்மீகப்  பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோர்,மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.அப்படித் தொடர்பு கொள்ளும்போது உங்களின் பிறந்த ஜாதகத்தின் நகல்,உங்களின்புகைப்படம் போன்றவற்றை aanmigakkadal@gmail.comக்கு 20.5.2012க்குள் அனுப்பி வைக்கவும்.இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தகுதியான மாணவ,மாணவிகளை திரு.சிவமாரியப்பன் அவர்கள் தலைமையிலான ஆன்மீகக்குழுவினர் தேர்ந்தெடுப்பார்கள்.தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பயிற்சி நடைபெறும் இடம்,குருதட்சணை விபரம் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்படும். 

இப்படிக்கு ஆன்மீகக்கடல் அறக்கட்டளை,ஸ்ரீவில்லிபுத்தூர்.

பின்குறிப்பு:1.இந்த இரண்டு மணி நேர ஆன்மீகப்பயிற்சியின்  போது செல்போன் அணைத்து வைக்கப்பட வேண்டும்.

 2.இந்த  பயிற்சியை வேறு எவருக்கும்,எக்காரணம் கொண்டும் சொல்லித்  தரக்கூடாது.

3.இந்த பயிற்சியின் முடிவில்,உங்கள் ஒவ்வொருவரின் பிரச்னைகளுக்கும் ஆன்மீக ரீதியான,இலவசமான வழிகாட்டுதல் தரப்படும்.

ஓம்சிவசிவஓம்