RightClick

அமெரிக்கா ராணுவம் ‘ஆசனம்’ போடுகிறது!!!


புராதனமான இந்துக்கலையான பிராணயாமம்,யோகா,தியானம் பயிற்சி அமெரிக்க ராணுவத்தில் வேகமாக பரவிவருகிறது.யோகா பற்றிய பத்திரிகைகளில் மாதம் 1,00,000 பிரதிகள் விற்று இரண்டாம் இடத்தில் இருக்கும் பிட் யோகா என்ற இதழின் ஆகஸ்டு 2006 வெளியீட்டில் வெளிவந்திருக்கும் ஒரு புகைப்படமே இதற்குச் சான்றாகும்.


அமெரிக்க கடற்படை விமானிகள் இருவர் தமது முழுச்சீருடையுடன் விமானம் தாங்கிக் கப்பல் தளத்தில் அமர்ந்தபடி யோகாசனம் செய்வது போன்ற புகைப்படம் வெளியாகியிருந்தது.
முதலில் இது அதிர்ச்சியாக இருந்தது.இந்த அமைதிப்படுத்தும் கலையை ராணுவவீரர்கள் பயில்வதா? என்று தோன்றியது.ஆனால்,கூர்ந்து கவனித்த போது தான் தெரிந்தது.வீரர்கள் முகத்தில் அப்படியொரு உள்ளார்ந்த பொலிவு!!!” என்கிறார்  பிட்யோகாவின் ஆசிரியர் ரீட்டா ட்ரைகர்.
நன்றி:த ஹிந்து,பிஸினஸ் லைன் 18.7.2006