RightClick

மாசிமாத தேய்பிறை அஷ்டமியன்று(14.2.12) ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபடுவோம்;


கர வருடம்,மாசி மாதம் தேய்பிறை அஷ்டமியானது 14.2.12 செவ்வாய்க்கிழமை மதியம் 2.04 முதல் 15.2.12 புதன்கிழமை காலை 11.52வரை இருக்கிறது.


இதில் செவ்வாய்க்கிழமை அன்று இராகு காலம் மதியம் 3 மணி முதல் 4.30 வரையும்,புதன் கிழமை அன்று இராகு காலம் மதியம் 12 முதல் 1.30 வரையும் வருகிறது.இதில்,தேய்பிறை அஷ்டமியும்,இராகு காலமும் சேர்ந்து வரும் நாள் 14.2.12 செவ்வாய்க்கிழமை மதியம் 3 முதல் 4.30 வரை ஆகும்.இந்த நேரத்தில் நாம் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால்,நமது கடுமையான கடன்கள் தீரத்துவங்கும்;வராக்கடன் வசூலாகத்துவங்கும்;தரவேண்டிய கடனை அடைக்குமளவுக்கு நமது வருமானம் அதிகரிக்கும்;நாம் செய்யும் தொழிலின் வளர்ச்சி படிப்படியாக 4 மடங்குக்கு அதிகரிக்கும்;


மும்மூர்த்திகளான பிரம்மா,விஷ்ணு,ருத்ரன்=இம்மூவரையும் இயக்கிக்கொண்டு இருப்பவரே சிவன் ஆவார்.சிவனின் முதல் அவதாரம் பைரவர் ஆவார்.பைரவரில் மொத்தம் 64 விதமான அவதாரங்கள் இருக்கிறார்கள்.இந்த 64 வித பைரவர்களின் வீட்டில் வைத்து வழிபடத்தகுந்தவர் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்.
நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் ஐயா அவர்களின் ஆன்மீக ஆராய்ச்சிப்படி,எட்டு தேய்பிறை அஷ்டமிகளுக்கு ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டு வர,நமது பணச்சிக்கல்கள்,குடும்பப்பிரச்னைகள்,அரசியலில் இருப்போருக்கு அரசியல் சதிகள் தீரும்;


தமிழ்நாட்டில் மொத்தம் 10 ஊர்களில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகள் இருக்கின்றன.அவைகள் சென்னையில் இருக்கும் வானகரம், தாம்பரத்திலிருந்து வேலூர் செல்லும் வழியில் இருக்கும் படப்பை என்னும் ஊரில் அருள்மிகு ஜெயதுர்கா பீடம்,சிதம்பரம்,பொன்னமராவதி அருகில் இருக்கும் தபசுமலை;காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி,திண்டுக்கல் அருகே இருக்கும் தாடிக்கொம்பு போன்ற இடங்களில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் அருள்பாலிக்கிறார்.

வீட்டில் வைத்து வழிபட விரும்புவோர், ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் புகைப்படத்தை ஆன்மீகக்கடலிடமிருந்து தட்சிணை கொடுத்து பெற்றுக்கொள்ளலாம்.

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ