RightClick

கழுகுமலையும் மார்கழி பவுர்ணமியும்





8.1.2012 அன்று திருவாதிரை நட்சத்திரத்தில் பவுர்ணமி அமைந்திருக்கிறது.கழுகுமலையில் கழுகாசல மூர்த்தியாக முருகப்பெருமான் காட்சியளிக்கிறார்.இந்த நாளில் மாலை 4 மணி முதல் 8 மணிக்குள் கழுகுமலைக்கு வந்து கிரிவலம் செல்வதன் மூலமாக சித்தர்களின் ஆசி நேரடியாக கிடைக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது;கடந்த மாதம் அமாவாசையன்று இதற்கான சந்தர்ப்பங்கள்  நமது ஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு கிடைத்தன.ஆமாம்!

இந்த நாளில் நாம் நமது ஊரிலிருந்து ஐந்து கிலோ நவதானியங்களை(கலந்தது)யும்,ஒரு கிலோ டயமண்டு கல்கண்டையும் வாங்கிக்கொண்டு,கழுகுமலைக்கு மாலை 4 மணிக்கு வந்துவிடவேண்டும்.ஆன்மீக ஆராய்ச்சியாளரும்,நமது ஆன்மீக வழிகாட்டியும், நமது ஆன்மீக குருவுமாகிய சிவநிறை:சகஸ்ரவடுகர் அவர்களின் ஆன்மீக சொற்பொழிவு ஒரு மணி நேரம் இருக்கிறது.இதில் கலந்து கொள்வோம்;ஆன்மீக சொற்பொழிவு நிறைவடைந்தபின்னர்,அவருடன் கழுகுமலை கிரிவலம் செல்வோம்;வெறும் 2 கிலோ மீட்டர்கள் தூரமே இருக்கும் கழுகுமலையை நாம் 40 நிமிடங்களுக்குள் சுற்றி வந்துவிடமுடியும்.கிரிவலப்பாதை முழுவதுமே குடியிருப்புகள் இருக்கின்றன.இருப்பினும்,நாம் கொண்டு வந்த ஐந்துகிலோ நவதானியத்தையும்,ஒரு கிலோ டயமண்டு கல்கண்டையும் கிரிவலப்பாதையில் மனித காலடி படாத இடங்களில் தூவிக்கொண்டே செல்வோம்;இதன் மூலமாக நமது முன்னோர்களில் யார் சித்தராக இருக்கிறாரோ,அவரது ஆசிர்வாதம் நமக்கு நிச்சயமாகக் கிடைக்கும் என்பது நமது ஆன்மீக குரு சகஸ்ரவடுகர் ஐயாவின் 25 ஆண்டு ஆராய்ச்சிகளின்முடிவாகும்.

கிரிவலம் நிறைவடைந்ததும்,ஆன்மீக குரு சகஸ்ரவடுகர் அவர்களிடம் ஆன்மீகம் தொடர்பான சந்தேகங்களைக்கேட்கலாம்;நமது நீண்டகால பிரச்னைகளுக்கு ஆன்மீகத்தீர்வு கேட்கலாம்;அப்படி கேட்பதற்கு எந்த வித நேரடி & மறைமுகக் கட்டணமும் கிடையாது;இவரிடம் ஆன்மீக ஆலோசனையை கேட்டு அதை அப்படியே பின்பற்றியவர்கள் அனைவருமே அவர்களின் பிரச்னைகளிலிருந்து முழுமையாக விடுபட்டிருகின்றனர்.எனவே, நீண்டகால பிரச்னைகள் இருப்பவர்கள் இந்த கழுகுமலை கிரிவல நிகழ்ச்சியை பயன்படுத்திக்கொள்வது உங்களுக்கு நல்லது.


கோவில்பட்டியிலிருந்து அடிக்கடி கழுகுமலைக்கு டவுண் பஸ்வசதி இருக்கிறது;சங்கரன் கோவிலில் இருந்தும் வரலாம்;சிவகாசியிலிருந்து அடிக்கடி இல்லாவிட்டாலும்,பஸ் வசதி இருக்கிறது.ராஜபாளையம் வந்து,சங்கரன் கோவில் வழியாகவும் வரலாம்.