RightClick

புளியங்குடி சிவமாரியப்பன் அவர்களின் இன்னொரு ஆன்மீகப்பணி












சுமார் 13 வருடங்களாக புளியங்குடி சிவமாரியப்பன் அவர்கள்,மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றம்,முள்ளிக்குளம் கிராமத்தின் குருநாதராக செயல்பட்டுவருகிறார்.
முறைப்படி 2002 முதல் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றம் ,முள்ளிக்குளம் கிளை பதிவு செய்யப்பட்டு சுயமாக செயல்பட்டுவருகிறது.இந்த ஆண்டு 1.1.2012 அன்று புளியங்குடி தாலுகா முள்ளிக்குளம் கிராமம் அருள்மிகு அங்காளபரமேஸ்வரி சமேத சிவகுருநாத சுவாமி திருக்கோவிலில் இருமுடி கட்டும் விழா நடைபெற்றது.இதில் சுமார் 700 சக்திகள் 15 நாட்கள் விரதமிருந்து இருமுடிகட்டிக்கொண்டு,மேல்மருவத்தூருக்கு புறப்பட்டுச் சென்றனர்.
கடந்த பல வருடங்களாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார  வழிபாட்டு மன்றம்,முள்ளிக்குளம் கிளையிலிருந்து விரதமிருந்து,இருமுடிகட்டிக்கொண்டு சென்ற சக்திகளின் பல குடும்பப் பிரச்னைகள் தீர்ந்திருக்கின்றன.பிரிந்த கணவன் மனைவி மீண்டும் ஒன்று சேர்ந்திருக்கின்றனர்;திருமணத்தடை பலருக்கு நீங்கி,சிறந்த வாழ்க்கைத் துணை அமைந்திருக்கிறது;புத்திரபாக்கியம் இல்லாத பலருக்கு மழலைச்செல்வம் கிடைத்திருக்கிறது.இந்த நாளில் அன்னதானம் செய்யப்பட்டது;அன்னதான பொறுப்பை புளியங்குடி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றத்தினர் ஏற்றுக்கொண்டனர்.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ