RightClick

மார்கழி மாதபவுர்ணமி(8.1.12)யன்று கழுகுமலை கிரிவலம்









கழுகுமலை கழுகாச்சலமூர்த்தி கோவில் வளாகத்தில் திரு.சிவமாரியப்பன் அவர்கள் மார்கழிமாத பவுர்ணமியன்று(8.1.12 ஞாயிறு+திருவாதிரை நட்சத்திரம்) மாலை 6 மணியளவில் ஆன்மீக சொற்பொழிவாற்றினார்.அதில்,நமது கர்மவினையை தீர்ப்பது எப்படி? ஏன் நவதானியங்களை எந்த ஒரு மலையையும் சுற்றிவரும்போது தூவ வேண்டும்? என்பது பற்றி எடுத்துரைத்தார்.ஏராளமான பெண் பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.


ஆன்மீகச் சொற்பொழிவுக்குப் பிறகு,திரு.சிவமாரியப்பன் அவர்கள் தலைமையில் கழுகுமலை கிரிவலம் சென்றோம்.கிரிவலத்தின் போது,நவதானியங்களும்,டயமண்டு கல்கண்டும் கலந்து,கிரிவலப்பாதையில் தூவப்பட்டன.அவ்வாறு தூவிக்கொண்டே அனைவரும் மனதிற்குள் ஓம்சிவசிவஓம்; ஓம்சிவசிவஓம் என ஜபித்தவாறு கிரிவலம் வந்தோம்;


கழுகுமலை கிரிவலத்திற்கு தமிழ்நாடு முழுவதுமிருந்து பலர் கலந்து கொண்டனர்.கிரிவலம் நிறைவடைந்த பின்னர்,கழுகாச்சல மூர்த்தியை வழிபட்டோம்.வழிபட்டப்ப்பின்னர், ஒவ்வொருவருக்கும் அவரவர் பிரச்னைகளுக்கு ஆன்மீகரீதியான சுயபரிகாரங்களை திரு.சிவமாரியப்பன் அவர்கள் சொல்லி,ஆன்மீக வழிகாட்டினார்.
ஓம்சிவசிவஓம்