RightClick

தை மாத தேய்பிறை அஷ்டமி 16.1.12 திங்கட்கிழமையன்று ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்வோம்;





மனிதர்களாகிய நமக்கு செல்வ வளத்தை அள்ளித்தருவது அஷ்டலட்சுமிகள் ஆவர். நமக்கு செல்வ வளத்தை அள்ளித்தருவதால்,இவர்களுக்கு சக்தி குறைந்துகொண்டே வரும்;அப்படி குறையும் சக்தியை அதிகரிப்பதற்காக,அஷ்ட லட்சுமிகளும் ஒவ்வொரு தமிழ்மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமியன்று வரும் ராகு காலத்தில்  ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னிதிக்கு வருகைதந்து,வழிபடுகின்றனர்.நாமும் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் வரும் ராகு காலத்தில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டுவந்தால்,ஒரே நேரத்தில் நமது கர்மவினைகள் தீரும்;அதே சமயம்,நமது செல்வ வளம் அதிகரிக்கும்.இந்த ஸ்ரீசொர்ண ஆகர்ஷணபைரவர் வழிபாடு செய்ய நாம் பின்பற்ற வேண்டிய ஒரே ஒரு கட்டுப்பாடு அசைவம் சாப்பிடுவதை முழுமையாகக் கைவிடுவது மட்டுமே!இந்த தெய்வீக ரகசியத்தை 40 வருடங்களாக ஆன்மீக ஆராய்ச்சி செய்து நமக்குத் தெரிவித்தவர் ஆன்மீகத் தென்றல்,சிவகடாட்சம் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் ஆவார்;எனக்குத் தெரிவித்ததோடு, தமிழ்கூறும் நல்லுலகிற்கு தெரிவிக்க ஆசி தந்தவர் எனது ஆன்மீக குரு புளியங்குடி சிவமாரியப்பன் அவர்கள் ஆவார்.

கர வருடம்,தை மாதத்தின் தேய்பிறை அஷ்டமியானது நாளை 16.1.12 திங்கட்கிழமை வருகிறது.இந்த நாளில் காலை 7.30 முதல் 9 மணிக்குள் ராகு காலம் அமைந்திருக்கிறது.இந்த நேரத்தில் நமது வீட்டில்,ஸ்ரீ சொர்ண ஆகர்ஷணபைரவர் போட்டோவின் முன்பாக அல்லது தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னிதியின் அமர்ந்து கொண்டு ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் மூலமந்திரத்தை 330 தடவை ஜபிக்க வேண்டும்.அப்படி ஜபித்தால்,அடுத்த ஒரு மாதத்திற்குள்(அடுத்த தேய்பிறை அஷ்டமிக்குள்) நமது மிகப்பெரிய பணப்பிரச்னை தீரும்;அதாவது வராத கடன் வசூலாகிவிடும்;அல்லது கொடுக்க வேண்டிய கடனை கொடுக்குமளவுக்கு வருமானம் வந்துவிடும்;மேலும் நாம் பார்க்கும் வேலை அல்லது தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.நமது சம்பளம் உயரும்;தொழிலில் விற்பனை அதிகரிக்கும்;பல ஆன்மீகக்கடல் வாசக வாசகிகளுக்கு இந்த அனுபவங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன.அவர்களின் மின் அஞ்சல்களும்,அலைபேசி பேச்சுக்களும் இதை திரும்ப திரும்ப உறுதி படுத்துகின்றன.
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் மூலமந்திரம்:=

ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹிரூம்
சமவம்ஸ ஆபதுத்தோரணாய
அஜாமிள பந்தநாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
மமதாரித்ரிய வித்வேஷணாய
ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ


தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவில்கள் வருமாறு:
சென்னை அருகில் தாம்பரத்திலிருந்து வேலூர் செல்லும் வழியில் படப்பையில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஜெயதுர்கா பீடம்;
சென்னை அருகே இருக்கும் வானகரம்;
காஞ்சிபுரம் அருகே இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி;
சிதம்பரம்;
சீர்காழி;
திருச்சி மலைக்கோட்டை அருகில்;
பொன்னமராவதி அருகில் இருக்கும் தபசுமலை;
காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி;
திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டர்கள் தூரத்தில் அமைந்திருக்கும் தாடிக்கொம்பு;

எல்லோரும் செல்வச்செழிப்பை அடைவோம்;வறுமை,கர்மவினையில்லாத நாடாக மாற்றுவோம்;

ஓம்சிவசிவஓம்