RightClick

கண்டச்சனி துயரம் நீங்கிட செய்ய வேண்டிய காலபைரவர் வழிபாடு



21.12.11 முதல் மூன்றாண்டுகளுக்கு மேஷராசியினருக்கு கண்டச்சனி எனப்படும் ஏழாமிடத்துச்சனி நடைபெறுகிறது.இது இல்லறத்தில் இணையற்ற துன்பங்களைத் தரும்.இதைச் சரி செய்ய, அசைவம் சாப்பிடுவதை கைவிட வேண்டும்.கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஓவ்வொரு திங்கட் கிழமையும் காலை 7.30 முதல் 9 மணிக்குள் அல்லிமலர் மாலை ,புனுகு பூசி,சாம்பல் பூசணியில் இலுப்பையெண்ணெய் தீபமேற்ற வேண்டும்.பாகற்காய் கலந்த சாதத்தை படையலிட்டு,அர்ச்சனை செய்ய வேண்டும்.அல்லது அர்ச்சனை செய்வதற்குப் பதிலாக பைரவ சதநாமாவளியை மனதுக்குள் பாட வேண்டும்.
இந்த தெய்வீக ரகசியத்தை நமக்கு அருளிய ஆன்மீக ஆராய்ச்சியாளர் சிவமயம் திரு.சகஸ்ரவடுகர்,புளியங்குடி அவர்களுக்கும்  கோடி கோடி கூகுள் நன்றிகள்!!!




சனிப்பிரதோஷ நாட்களான 2.6.12; 16.6.12;13.10.12;27.10.12;23.2.13;9.3.13 இந்த தேதிகளில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இருக்கும் கால பைரவரை இவ்வாறு வழிபாடு செய்வது உடனடி பலன்களைத் தரும்.இது பல்லாண்டுகளாக நிரூபிக்கப்பட்ட உண்மை.


அல்லது
திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் இருக்கும் ஸ்ரீவைகுண்டம் ஊரில் அமைந்திருக்கும் சிவாலயமானது தென் தமிழ்நாட்டின் நவகைலாசங்களில் ஒன்றாகும்.இங்கு இருக்கும் சிவபெருமான்,சனி பகவானின் அம்சத்தோடு அருள்கிறார்.இங்கு மேற்கூறிய சனிப்பிரதோஷ நாட்களில் கால பைரவர் வழிபாடு செய்வது சிறப்பாகும்