RightClick

சித்தர்கள் அடிக்கடி வழிபடும் கழுகாசலமூர்த்தி,கழுகுமலை






1500 ஆண்டுகளுக்கு ஒருமுறை முதன்மை சித்தர்கள் எனப்படும் 18 சித்தர்களும் 24.12.11 அன்று மாலை நெல்லை மாவட்டம் கழுகுமலையில் இருந்து அருள்புரிந்து வரும் கழுகாசலமூர்த்தி முருகக்கடவுளை வழிபட சூட்சுமமாக வர இருப்பதை ஆன்மீக ஆராய்ச்சியாளரும் எனது ஆன்மீக குருவுமாகிய திரு.சகஸ்ரவடுகர் அவர்களின் ஆசியோடு தெரிவித்திருந்தோம்.

24.12.11 சனிக்கிழமையும்,அமாவாசையும் சேர்ந்திருந்த இந்த தெய்வீகமான நன்னாளில் மாலை 5 மணி முதல் இரவு 7 மணிவரையிலும் கழுகுமலைக்கு தமிழ்நாடு முழுவதுமிருந்து ஆன்மீகத் தேடல் உள்ளவர்கள்,சித்தர்களை தரிசிக்க ஆர்வமுள்ள ஆன்மீக தாகமுள்ளவர்கள்,முருக பக்தர்கள் சுமார் 300 பேர்கள் வந்திருந்தனர்.
கழுகாசலமூர்த்தியை பத்தி,தேங்காய்,டயமண்டு கல்கண்டு,ரோஜாப்பூ மாலை,வெற்றிலை பாக்குடன் வந்து வழிபட்டனர்.வழிபட்டப் பின்னர்,திரு.சிவமாரியப்பன்,புளியங்குடி அவர்கள் தலைமையில் கழுகுமலையை  சிவமந்திரம் ஜபித்தவாறு கிரிவலம்  சென்றார்கள்.ஒரு சில பக்தர்களுக்கு கழுகாசலமூர்த்தி கோவிலிலேயே  ஒளிவடிவ சித்தர்கள் தரிசனம் கிடைத்தது;மேலும் பல பக்தைகளுக்கு கிரிவலப்பாதையில் அவர்களின் முன்னோர்களாகிய சித்தர்களின் தரிசனம் கிடைத்ததை,கிரிவலம் நிறைவடைந்ததும் தெரிவித்தனர்.சற்றும் எதிர்பாராமல்,கிரிவலம் நிறைவடைந்ததும்,கிரிவலம் வந்த பக்தர்களுக்கு அன்னதானம் கிடைத்தது;கி.பி.2012 க்கான காலண்டர்களும் ஒரு அன்பர் விநியோகித்தார்;அந்த காலண்டரின் பதிணெண் சித்தர்களின் படங்கள் இருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் உள்ளாக்கியது.
கிரிவலப்பாதையில் மிளகாய்ப்பழ சித்தரின் ஜீவ சமாதியை அனைவரும் தரிசனம் செய்தனர்.இந்த சித்தருக்கும் சென்னையில் இருக்கும் பாம்பன் சுவாமிகளுக்கும் சித்தத் தொடர்பு இருப்பதை திரு.சகஸ்ரவடுகர் அவர்கள் தெரிவித்தார்.

ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

கோவில் பட்டிக்கும் சங்கரன் கோவிலுக்கும் சிவகாசிக்கும் நடுவே கழுகுமலை அமைந்திருக்கிறது.கோவில் பட்டியிலிருந்து அடிக்கடி பேருந்து வசதிகள் அதிகமாக உள்ளன.கோவில்பட்டியிலிருந்து வெறும் 21 கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கிறது.அடுத்த படியாக சங்கரன்கோவிலில் இருந்தும் வரலாம்;சிவகாசியிலிருந்து மிகக்குறைவான பேருந்துவசதிகள் இருக்கின்றன.



ஓம் அருணாச்சலாய நமஹ
ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் நந்தீசாய நமஹ
ஓம் திருமூலதேவாய நமஹ
ஓம் கருவூர் தேவாய நமஹ
ஓம் ராமலிங்க தேவாய நமஹ