RightClick

அனைவருக்கும் பொதுவான சுலப பரிகாரம்





அளவற்ற கடன் அல்லது கடுமையான நோய் அல்லது குடும்பத்திலிருந்து விலக்கப்பட்டு/ புறக்கணிக்கப்பட்டு தனிமையில் வசிப்போர்களின் எண்ணிக்கை இன்று ஸ்பெக்ட்ரம் ஊழல் தொகையளவிற்கு உயர்ந்து கொண்டே செல்லுகிறது.(நமது தமிழ்நாட்டில்)

அவரவர் பிறந்த ஜாதகம் பார்த்து பலன் சொல்லி பரிகாரம் சொல்லி அதிலிருந்து மீள்வதற்கு குறைந்தது ஒரு மாதம் ஆகலாம்;அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் கூட ஆகலாம்;இந்நிலையில் இரண்டே இரண்டு பரிகாரங்கள் மூலமாக நமது பிறந்த ஜாதகத்திலிருக்கும் தோஷங்களை நீக்கமுடியும்.

அவை :

1.அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தது 20 முறை (அதிகபட்சம் நூறு முறை)திருஅண்ணாமலை கிரிவலம் செல்லுதல்



2. தினமும் காலை ஒரு மணி நேரம் மற்றும் மாலை/இரவு ஒரு மணி நேரம் ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ ஜபித்தல்



இந்த இரண்டை மட்டும் செய்ய ஆரம்பித்தாலே நமது சிக்கல்கள் தீரத் துவங்கும்.



திரு அண்ணாமலை கிரிவலத்தை பவுர்ணமி அல்லது அமாவாசையில்தான் செல்லவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது;மிகவும் சாதாரண நாட்களிலும் கிரிவலம் செல்லலாம்.இப்படிச் செல்லுவதாலும் நமது கடுமையான தோஷங்கள்,கடன்கள்,நோய்/கர்மநோய்/எதிர்ப்பு/எதிரி/அரசு சார்ந்த பிரச்னைகள் தீரத் துவங்கும் என்பதை எனது அனுபவத்தில் உணர்ந்தேன்.



அதேபோல, தினமும் இருமுறை (காலை ஒரு மணி நேரம் மாலை/இரவு ஒரு மணி நேரம்) ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ ஜபித்து வர வேண்டும்.இப்படி ஓராண்டு வரை ஜபித்துவந்தால்,ஒரு மாதம் ஜபித்ததுமுதல் ஓம்ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ மந்திரம் நமக்கு அற்புதமான அரிய வழிகளைக் காட்டும்.அது பணப்பிரச்னையாக இருந்தாலும் சரி; மனப்பிரச்னையாக இருந்தாலும் சரி; மானப்பிரச்னையாக இருந்தாலும் சரி; போலீஸ் பிரச்னையாக இருந்தாலும் சரி;வம்பு வழக்குகளாக இருந்தாலும்சரி; சொத்துத் தகராறாக இருந்தாலும் சரி; உங்களுடைய நியாயமான கோரிக்கைகள் ஜெயிக்கும்;நீண்டகால பிரச்னைகள் தீரும்.