RightClick

பண நெருக்கடியிலிருந்து மீள உதவவும்,செய்யும் தொழிலில் ஏற்படும் விழ்ச்சியைத் தடுக்கவும்,நமது கர்மங்களை அழித்தவாறே,நமக்குச் செல்வச் செழிப்பை அள்ளித்தரும் சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு


 எனது ஆன்மீக குரு சிவ.மாரியப்பன் அவர்களின் வழிகாட்டுதலோடு இந்த கட்டுரையை ஆன்மீகக் கடல் வலைப்பூ வாசகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.



பல நூற்றாண்டுகளாக மறக்கப்பட்டிருந்த பைரவர் வழிபாட்டினை மீண்டும் தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் திரு.சிவமாரியப்பன்,புளியங்குடி அவர்கள்.இவர் சுமார் 30 ஆண்டுகளாக ஆன்மீக ஆராய்ச்சியில் ஈடுபட்டு தனது அனுபவங்களால் பல்லாயிரக்கணக்கான மக்களை மாந்திரீக பாதிப்பிலிருந்து நீக்கியவர்;கடுமையான கர்ம வினைகளைப் போக்கி பலரது வாழ்க்கையில் நிம்மதி,செல்வ வளம் என்னும் தீபங்களை ஏற்றியவர்.

அவரது லட்சியங்கள்

 பைரவ வழிபாட்டின் முக்கியத்துவத்தை உணரச்செய்வது

 அன்னதானத்தின் பெருமைகளை நித்யக் கடமையாக்குவது

இறுதியாக ஆன்மீக ஆராய்ச்சி செய்பவர்களுக்கு தேவையான உதவிகள்,வழிகாட்டுதல்கள் செய்து அவர்களது முதுமைக் காலத்தில் கஷ்டமில்லாமல் வாழ வைப்பது.

இதில் முதல் மூன்று லட்சியங்களை கை.வீரமுனியாகிய நான் ஆன்மீகக்கடல் வலைப்பூ மூலமாகவும்,பல ஜோதிட மாத இதழ்கள் மூலமாகவும் பரப்பத் துவங்கியிருக்கிறேன்.



இதில் அடுத்த கட்டமாக பைரவர்களில் வீட்டில் வைத்து வழிபடக்கூடியவரான சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாட்டினைப் பிரபலப்படுத்துவது என முடிவு செய்து,எனது ஆன்மீக குரு சிவ.மாரியப்பன் அவர்களின் அனுமதியைக் கேட்டேன்.அவர் எனக்கு பரிபூரணமாக ஆசிர்வாதித்து அனுமதித்தார்.



இன்னும் பல ஆன்மீக சூட்சும ரகசியங்கள் நமது ஆன்மீகக் கடல் வலைப்பூவில் வெளிவர விருக்கின்றன.




90 நாட்கள் தொடர்ந்து நமது வீடு அல்லது அலுவலகத்தில் சொர்ண பைரவரின் போட்டோவை வைத்து வழிபாட்டு முறையைப் பின்பற்றினால்,எந்த ஜாதகராக இருந்தாலும் அவரது பண நெருக்கடி தீரத்துவங்கும்.

வேலையில்லாதவர்களுக்கு நல்ல அவரவரின் திறமை,தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும்.



பலர் கொடுத்த கடனை திருப்பிவாங்கிட முடியாமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பர்;அவர்களுக்கு வராகடன் வசூலாகும்;

செய்தொழிலில் திடீரென நெருக்கடியோ வீழ்ச்சியோ துவங்கியிருக்கும்;அந்த நிலையை மாற்றி தொழிலில் படிப்படியான எழுச்சி உண்டாகும்.



சொர்ண பைரவரின் போட்டோசொர்ண பைரவரின் வழிபாட்டு முறை தேவைப்படுவோர் aanmigakkadal@gmail.com என்ற மின் அஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளவும்.



போட்டோவுக்கும்,வழிபாட்டு முறைக்கும் வாங்கப்படும் தொகையில் பெரும்பகுதி  பைரவர் வழிபாட்டு முறையைப் பரப்புவதற்கு செலவிடப்படும்.






தவிர,ஆன்மீகக் கடல் வலைப்பூவில் சொல்லப்பட்ட பல ஆன்மீகப் பரிகாரங்கள்,வழிபாட்டு முறைகள் என்னால் அல்லது என்னிடம் ஜோதிடம் பார்த்தவர்களால் பரிசோதனை செய்யப்பட்டப் பின்னரே,ஆன்மீகக்கடல் வலைப்பூவில் வெளியிடப்பட்டு வருகின்றன.எனவே, நீங்கள் உங்களது வாழ்க்கையில் நிம்மதியாகவும்,செல்வச் செழிப்போடும் (ஆன்மீகக் கடல் வழிகாட்டுதலின் படி) வாழ்க வளமுடன்!!!