ஆன்மீக்ககடலில் பயணிப்பவர்கள்

ஆன்மீகக்கடல் அறக்கட்டளை நடத்தும் ஆன்மீகவகுப்பு 1



திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஆயுட்காலசீடர் திரு.சிவமாரியப்பன் அவர்கள் ஆன்மீகம் ஒரு அறிமுகம்,ஜீவசக்தி வாய்ந்த விபூதி தயாரிப்பு முறையும்,அதை பயன்படுத்தும் விதமும் என்ற தலைப்பில் முதலாம் ஆன்மீகப் பயிற்சி வகுப்பு நடத்திட சம்மதம் தெரிவித்துள்ளார்கள்.

இந்த வகுப்பானது 25.3.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் திரு அண்ணாமலையில் நடைபெற இருக்கிறது.மிக முக்கியமான ஆன்மீகப் பெரியவர்களின் ஆசியோடும்,மிகச்சிறந்த பேராசிரியர்களின் முன்னிலையிலும் இந்த ஆன்மீகப்பயிற்சி வகுப்பு நடைபெற இருக்கிறது.இரண்டு மணி நேர வகுப்பில் கலந்து கொள்ள  குருதட்சிணை உண்டு.

 இந்த ஆன்மீகப் பயிற்சி வகுப்பில்  21 வயதுக்கு மேற்பட்ட எவரும் கலந்து கொள்ளலாம்.108 மாணவ,மாணவிகளுக்கு மட்டுமே இந்த வகுப்பில் கலந்துகொள்ள அனுமதி!!!

இந்த முதலாம் ஆன்மீகப்  பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோர்,மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.அப்படித் தொடர்பு கொள்ளும்போது உங்களின் பிறந்த ஜாதகத்தின் நகல்,உங்களின்புகைப்படம் போன்றவற்றை அனுப்பி வைக்கவும்.இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தகுதியான மாணவ,மாணவிகளை திரு.சிவமாரியப்பன் அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

இப்படிக்கு ஆன்மீகக்கடல் அறக்கட்டளை,ஸ்ரீவில்லிபுத்தூர்.


பின்குறிப்பு:1.இந்த இரண்டு மணி நேர ஆன்மீகப்பயிற்சியின்  போது செல்போன் அணைத்து வைக்கப்பட வேண்டும்.
 2.இந்த  பயிற்சியை வேறு எவருக்கும்,எக்காரணம் கொண்டும் சொல்லித்  தரக்கூடாது.
3.இந்த பயிற்சியின் முடிவில்,உங்கள் ஒவ்வொருவரின் பிரச்னைகளுக்கும் ஆன்மீக ரீதியான,இலவசமான வழிகாட்டுதல் தரப்படும்.

ஓம்சிவசிவஓம்





திரு.சிவமாரியப்பன் அவர்களின் ஆன்மீகப்பணிகளும்,அதற்குரிய அங்கீகாரங்களும்





திரு.சிவமாரியப்பன் அவர்கள் 20 ஆண்டுகளாக ஆன்மீக ஆராய்ச்சியாளராக செயல்பட்டுவருகிறார்.இவரது விஷேசமான சுபாவத்தை நேரில் சந்தித்துப் பேசுவதால் மட்டும் புரிந்துகொள்ளமுடியாது;பழகியபின்னரே உணர்ந்துகொள்ளமுடியும்.
கி.பி.2003 டூ 2004 ஆம் ஆண்டில் பாண்டிச்சேரி முதலமைச்சரால் ரமணர் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.


கி.பி.2005 டூ 2006 ஆம் ஆண்டில் தஞ்சாவூரில் வாழ்ந்துவரும் ராஜராஜசோழனின் வழிவம்சத்தவர்களால் மகாவீர் விருது வழங்கப்பட்டுள்ளது.


கி.பி.2006 டூ 2007 ஆம் ஆண்டில் சென்னையில் எம்.ஜி.ஆர்.பல்கலைக்கழகத்தில் உலகசித்த தத்துவ மாநாடு நடைபெற்றது.அந்த மாநாட்டில் திரு.ராம் மோகன்  என்பவரால் மகா சித்தர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூர் திரு.நாராயணசுவாமிகளால் திருக்குற்றாலத்தில் கி.பி.2008 டூ 2009 இல் ஆன்மீகச் செம்மல் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

5.9.2009 அன்று புளியங்குடி D,S.P.அவர்களால் ஆன்மீக சேவைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இது தவிர ஏராளமான ஆன்மீக விருதுகளும் இவருக்கு,இவரது ஆன்மீகச் சேவையைப் பாராட்டி வழங்கியிருக்கின்றனர்.

ஓம்சிவசிவஓம்








மிஸ்டிக் செல்வம் ஐயா உருவாக்கியுள்ள ஆன்மீக சாம்ராஜ்ஜியம்



கி.பி.1937 ஆம் ஆண்டில் இராஜபாளையம் மாநகரில் செல்லப்பா என்ற பெயருடன் திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் பிறந்தார்.தனது 19 ஆம் வயதில் அரசுப்பணியில் சேர்ந்த அவர்,திருச்செந்தூரில் பணிநிமித்தமாக சில காலம் தங்கியிருந்தார்;அப்போது அவருக்கு  சில தெய்வீக அனுபவங்கள் ஏற்பட்டன.இதனால், அவருக்கு அசாதாரண தெய்வீக சக்திகள் உண்டாயின;

இதுபற்றி விரிவான தனது வாழ்க்கை அனுபவத்தை  அவரே ஆன்மீகப்பயணம்1,2 என்று இரண்டு புத்தகங்களாக எழுதி,மிஸ்டிக் இந்தியா மிஷன்(இந்திய ஆன்மீகக் கழகம்),1,முதல் மெயின் ரோடு,ஜெயராம் நகர்,கொளத்தூர்,சென்னை 99.என்ற முகவரியிலிருந்து வெளியிட்டுள்ளார்.இந்த முகவரி ஒரு வீடு ஆகும்.இந்த வீட்டில் திரு.P.பாலகிருஷ்ணன் ஐயா அவர்கள்,மிஸ்டிக் இந்தியா மிஷனின் மேனேஜிங் டிரஸ்டியாக பணிபுரிந்துகொண்டுவருகிறார்.இவரது செல் எண்:94442 53545.மிஸ்டிக் இந்தியா மிஷன் என்ற பெயருக்கு ரூ.1000/-(இந்தியப் பணத்தில் ரூபாய் ஆயிரம் மட்டும்) டி.டி.எடுத்து,இந்த முகவரிக்கு அனுப்பினால்,மிஸ்டிக் இந்தியா மிஷனின் ஆயுட்கால போஷகராக நீங்கள் கருதப்படுவீர்கள்.இதன்மூலமாக,உங்களுக்கு மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் எழுதிய ஆன்மீகப்பயணம் என்ற புத்தகம்(தற்போது இரண்டு பாகங்களும் ஒரே புத்தகமாக்கிவிட்டனர்) இலவசமாக அனுப்பி வைக்கப்படும்;மேலும்,மிஸ்டிக் இந்தியா மிஷனின் பிற ஆன்மீக வெளியீடுகள்,புத்தகங்கள் தொடர்ந்து உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
மதுரையில் ஒன்பது ஆன்மீகப்பயிற்சி வகுப்புகளை திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் நடத்தினார்கள்.விபூதிப் பிரயோகம்,ருத்ராட்சப்பிரயோகம்,மந்திரப்பிரயோகம்,சங்குப் பிரயோகம்,பிதுர் தோஷ நிவாரணம் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை தென்காசியில் செலவிட்டார்;தமிழ்நாடு முழுவதும் பயணித்து,பல ஆலயங்களை தரிசித்ததுடன்,தமிழ்நாட்டில் இருக்கும் சக்தி வாய்ந்த ஜீவசமாதிகளின் பட்டியலை தனது ஆத்ம சக்தியால் கணக்கெடுத்தார்;இப்படி கணக்கெடுப்பது மிகவும் சிரமமான,அதே சமயம் ஆபத்தான வேலை ஆகும்.இருப்பினும்,இவரும் இவரது சீடர் சிவமாரியப்பனும் இதை மக்கள் நலனுக்காக செய்து முடித்தார்கள்.

அந்தப் பட்டியலை மிஸ்டிக் இந்தியா மிஷன் திரு.இரா.கற்பூரசுந்தரபாண்டியன்,இ.ஆ.ப.,(பணிநிறைவு);மற்றும் அவரது துணைவியார் திருமதி.சாந்தா பாண்டியன் அவர்களின் பேராதரவோடு வெளியிட்டுள்ளனர்.இந்த புத்தகத்திலிருந்துதான் நமது ஆன்மீகக்கடலில் தமிழ்நாட்டில் இருக்கும் சித்தர்பீடங்கள்,துறவிகளின் ஜீவசமாதிகளின் பட்டியல் ஓரளவு வெளியிடப்பட்டுள்ளது.இந்த ஜீவசமாதிகளில் மகான்களின் ஜீவசமாதிகளில் மிதமிஞ்சிய சக்தி வாய்ந்த ஜீவசமாதிதான் சங்கரன்கோவிலை அடுத்துள்ள பாம்புக்கோவில் சந்தை மாதவானந்தசுவாமிகளின் ஜீவசமாதியும்,ஆசிரமமும் ஆகும்.
திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் துணைவியார் பெயர் திருமதி.செண்பகம் அம்மாள் ஆவார்.இவர்களுக்கு திருமணமானதிலிருந்து 15 ஆண்டுகளாக குழந்தைப்பாக்கியம் இல்லாமல் இருந்தது;திரு.சுப்பையா சாமிகள் ஆலோசனைப்படி,குற்றாலம் செண்பகாதேவி அருவியில் நவகலசயாகம் செய்தார்கள்.இதனால் பலன் ஏற்படவில்லை;அதன் பிறகு,தகுந்த ஆன்மீக ஆராய்ச்சிகளின் படி,நெல்லை மாவட்டம்,ராதாபுரம் தாலுக்காவுக்கு அருகில் இருக்கும் கடலோர கிராமம் விஜயாபதியில் நவகலசயாகம் செய்யப்பட்டது.இதன் விளைவாக திரு.மிஸ்டிக் செல்வம்தம்பதிக்கு ஒரு ஆண் மகன் பிறந்தார்.அவரது பெயர்   செ.முனீஸ்வரன் ஆவார்.
பல ஆலயங்களில் கோவில் குடமுழுக்கு ஆரம்பிப்பார்கள்:பல  காரணங்களால் அந்த காரியத்தை முடிக்க முடியாமல் திணறுவார்கள்;இந்த சூட்சுமரீதியான பிரச்னைகளை       திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் தனது ஆத்ம சக்தியால் மிக மிக மிக குறைந்த செலவில் தீர்த்துவைத்திருக்கிறார்.பல குடும்பப் பிரச்னைகளை பணமே வாங்காமல் தீர்த்துவைத்திருக்கிறார்.இவரால் பலனடைந்தவர்களின் எண்ணிக்கை சில ஆயிரங்களைத் தொடும்.
திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஆத்மார்த்தமான சீடர்களாக இருந்தவர்களின் பட்டியல் வருமாறு:
புளியங்குடி முன்னாள் சேர்மன் திரு.வெங்கட்ராமன் ஐயர்,சிந்தாமணி(புளியங்குடியின் ஒரு  பகுதி)
திரு.ஜெயராம் ராஜா,ராஜபாளையம்
திரு.ரவி,சிந்தாமணி(புளியங்குடியின் ஒரு பகுதி)
திரு.ஆறுமுகம்,ஆன்மீகத் தோட்டம்,மதுரை மற்றும்       திரு.ஆறுமுகம் அவர்களின் மனைவி
திருமதி.பீட்டர்சந்தியா,கூத்தங்குழி(நெல்லை மாவட்டம்)
திருமதி.வசந்தா அம்மையார்,மதுரை
திரு.ராமகிருஷ்ணன்,மதுரை
டாக்டர்.கணேஷ்பாபு,நிலக்கோட்டை
திரு.அஷ்வத் சங்கர்,சென்னை
திரு.திருவாழி,புளியங்குடி
திரு.ராஜாசுவாமிகள்,முடிவைத்தானேந்தல்
திரு.சுப்புமுதலியார்,ஒரிசா ஜவுளி உற்பத்தியாளர்,புளியங்குடி
திரு.சுரேஷ்,பல்டாக்டர்,புளியங்குடி
திரு.கோமதிநாயகம் என்ற விஸ்வாமித்ரன்(இது மிஸ்டிக் ஐயாவால் வைக்கப்பட்ட புதிய பெயர்) J.T.O.TELECOM
திரு.சிவமாரியப்பன்,புளியங்குடி (மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களால் என் ஜினியர் என செல்லமாக அழைக்கப்பட்டவர்)
ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசையன்று ஈஸ்வரபட்டசுவாமிகள் மற்றும் மிஸ்டிக் செல்வம் ஐயாவின் ஆணைப்படி,புளியங்குடியில் அன்னதானம் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றுவருகிறது.
திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஜீவசமாதி தூத்துக்குடி அருகில் இருக்கும் முடிவைத்தானேந்தல் கிராமத்தை அலங்கரிக்கிறது.திரு.ராஜாசுவாமிகள் இதை நேர்த்தியாக பராமரித்துவருகிறார்.இங்கு செல்ல விரும்புவோர்,திருநெல்வேலி டூ தூத்துக்குடி செல்லும் வழியில் வாகைக்குளம் என்ற ஸ்டாப்பில் இறங்கி,முடிவைத்தானேந்தலுக்கு ஆட்டோவில் செல்லலாம்.தினமும் இரவு 7 மணிக்கு திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஜீவசமாதியில் சந்திக்கலாம்.பிரதி பவுர்ணமி தோறும் அன்னதானம் நடைபெற்றுவருகிறது.இந்த அன்னதானத்திற்கு தங்களால் ஆன நன்கொடையை       திரு.ராஜாசுவாமிகளிடம் நீங்கள் நேரடியாகத் தரலாம்.ஓம்சிவசிவஓம் ஜபிக்க தீட்சை தேவையில்லை என்பது நாம் அறிந்ததே! இருப்பினும் நமக்காக இந்த மந்திரத்தை கண்டறிந்த திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஜீவசமாதிக்கு ஒருமுறை சென்று,அவரது ஜீவசமாதியில் ஒரு மணி நேரம் ஓம்சிவசிவஓம் ஜபித்தால்,திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஸ்பரிச தீட்சை நமக்குக் கிடைக்கும்.

திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் துணைவியார்    செண்பகம் அம்மாள்,தென்காசியில்   வசித்துவருகிறார்.அவரது முகவரி:செண்பகம் அம்மாள்,க/பெ.திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா,ரயில்வே பீடர் ரோடு,தென்காசி. மிஸ்டிக் செல்வம் ஐயாவின் குடும்பத்துக்கு குருகாணிக்கை செய்ய விரும்புவோர் இந்த முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் சகோதரி      திருமதி.விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் ஆவார்.இவர்தான் திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் மதுரை ஆன்மீகப் பயிற்சி வகுப்புக்களை ஆடியோவாகப் பதிந்து விற்பனை செய்து வருகிறார்.இவரது முகவரி:மிஸ்டிக் ஆடியோ,29C/33,வைகை நதி சாலை,பரவை,மதுரை 625401.போன்:0452 2463565.
ருத்ராட்சத்தைப் பற்றி ஏராளமான ஆராய்ச்சிகளை திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் செய்துள்ளார்.இந்த ஆராய்ச்சியின் விளைவாக கொல்கொத்தாவின் இந்திய மாற்றுமுறை பல்கலைக்கழகம் இவருக்கு ருத்ராட்சத் தெரபி என்ற பட்டத்தை தந்துள்ளது.
அஷ்ட கர்மாக்கள் எனப்படுபவை ஸ்தம்பனம்,மோஹனம்,வசியம்,ஆகர்ஷணம்,உச்சாடனம்,     பேதனம்,மாரணம் ,வித்வேஷணம் ஆகும்.இந்த அஷ்ட கர்மாக்களே சித்தர்களுக்குக் கைவந்த கலை ஆகும்.ஆன்மீகவாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட எல்லையில் முன்னேறும்போது,இந்த அஷ்டகர்மாக்களும் நம் ஒவ்வொருவருக்கும் கைகூடும்;இவைகளைக் கொண்டு நாம் நம்மைச் சுற்றியுள்ளவர்களை திகைக்க வைக்க முடியும்;அதே சமயம்,இவைகளைக் கொண்டு நாம் விரைவாக ஆன்மீக முன்னேற்றத்தில் அடுத்த படிக்கும் செல்லமுடியும்.ஆனால்,பெரும்பாலான சாதாரண மனிதர்கள் இதோடு ஆன்மீகவாழ்க்கையில் முன்னேறாமல் நின்றுவிடுகிறார்கள்.ஏமாற்று நிறைந்த இந்த கலியுகத்தில் இந்த அஷ்டகர்மாக்களும் தெரிந்தவர் இரண்டே இரண்டு பேர்கள் மட்டுமே.அந்த இரண்டு பேர்களில் ஒருவரே நமது ஆன்மீககுரு திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள்.இதை அவர் பல முறை நிரூபித்திருக்கிறார்.
திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் 40 ஆண்டுகளாக ஆன்மீக ஆராய்ச்சிகளளச் செய்துள்ளார்.அந்த 40 ஆண்டுகளில் 20 வருடங்களுக்கு அவருடன் இருந்தவரே எனது ஆன்மீக குரு திரு.சிவமாரியப்பன் அவர்கள்.
மிஸ்டிக் இந்தியா மிஷன் என்ற அறக்கட்டளையை உருவாக்கியதே திரு.மிஸ்டிக் செல்வம் ஐயாதான்.இதன்மூலமாக மூன்று முக்கியக் கொள்கைகளைப் பரப்ப வேண்டும் என்று விரும்பினார் திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள்.     அவை:1.ஜீவகாருண்யம் எனப்படும் அசைவம் சாப்பிடுவதை அடியோடு கைவிடுதல்
   2.மிக எளிய மந்திரமான ஓம்சிவசிவஓம் மந்திரஜபத்தைப் பரப்புதல்,மற்றும் மிக எளிய ஆனால் விரைவான பலன்களைத் தரக்கூடிய ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாட்டுமுறையை பரப்புதல்
  3.நலிந்த ஆன்மீக ஆராய்ச்சியாளர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்தல்  (இவைதான் ஆன்மீகக்கடல்,ஆன்மீகக்கடல் அறக்கட்டளையின் லட்சியங்களாக இருக்கின்றன)
ஓம்சிவசிவஓம்

பிறந்த ராசிக்கேற்ற சித்தர் வழிபாட்டு ஸ்தலங்கள்


அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர்,பழனி

பரணி(மேஷம்)    = ஸ்ரீகோரக்கர்,வடக்குப்பொய்கைநல்லூர்(நாகப்பட்டிணம்), ஸ்ரீபோகர்,பழனி
கார்த்திகை1(மேஷம்)=ஸ்ரீபோகர்,பழனி,ஸ்ரீதணிகைமுனி & ஸ்ரீசம்ஹாரமூர்த்தி,திருச்செந்தூர்;ஸ்ரீபுலிப்பாணி,பழனி
கார்த்திகை2,3,4(ரிஷபம்)=ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம்; ஸ்ரீவான்மீகர்,எட்டுக்குடி;ஸ்ரீஇடைக்காடர்,திரு அண்ணாமலை.
ரோகிணி(ரிஷபம்)=ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம்,      ஸ்ரீலஸ்ரீசிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர்,திருவலம்
மிருகசீரிடம்1,(ரிஷபம்)=சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர்
மிருகசீரிடம்2(ரிஷபம்)=ஸ்ரீசட்டைநாதர்,சீர்காழி & ஸ்ரீரங்கம்
                    ஸ்ரீபாம்பாட்டி சித்தர்,மருதமலை & சங்கரன்கோவில்
மிருகசீரிடம்3(மிதுனம்)=ஸ்ரீபாம்பாட்டி  சித்தர்,மருதமலை & சங்கரன்கோவில்
மிருகசீரிடம்4(மிதுனம்)=அமிர்தகடேஸ்வரர் ஆலயம்,திருக்கடையூர்
திருவாதிரை(மிதுனம்)=ஸ்ரீஇடைக்காடர் @ திரு அண்ணாமலை,ஸ்ரீதிருமூலர்@ சிதம்பரம்,ஸ்ரீஅமுதானந்தர் @ மணியாச்சி கிராமம்,ஸ்ரீசற்குரு @ எம்.சுப்புலாபுரம்,தேனிபகுதி.
புனர்பூசம்1,2,3(மிதுனம்)=ஸ்ரீதன்வந்திரி,ஸ்ரீவசிஷ்டர் @ வைத்தீஸ்வரன்கோவில்,
புனர்பூசம் 4(கடகம்)=ஸ்ரீதன்வந்திரி,வைத்தீஸ்வரன்கோவில்
பூசம்(கடகம்)=ஸ்ரீகமலமுனி,திருவாரூர்;ஸ்ரீகுருதட்சிணாமூர்த்தி,  திருவாரூர்(மடப்புரம்)
ஆயில்யம்(கடகம்)=ஸ்ரீகோரக்கர்,வடக்குப்பொய்கைநல்லூர்,    நாகப்பட்டிணம் அருகில்;ஸ்ரீஅகத்தியர்,ஆதிகும்பேஸ்வரர்கோவில்,                   கும்பகோணம்;ஸ்ரீஅகத்தியர்,திருவனந்தபுரம்,பொதியமலை,பாபநாசம்.
மகம்(சிம்மம்),பூரம்(சிம்மம்)=ஸ்ரீராமதேவர்,அழகர்கோவில்,மதுரைஅருகில்.
உத்திரம்1(சிம்மம்)=ஸ்ரீராமத்தேவர்,அழகர்கோவில்,மதுரை அருகில்,ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம்.
உத்திரம்2(கன்னி)=ஸ்ரீஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரா @ நெரூர்;
ஸ்ரீகரூவூரார் @ கரூர் பசுபதீஸ்வரர் கோவில்
ஆனிலையப்பர் கோவில் @ கருவூர்;கல்யாணபசுபதீஸ்வரர் கோவில் @ தஞ்சாவூர்.
அஸ்தம்(கன்னி)=ஆனிலையப்பர் கோவில் @ கரூவூர்,ஸ்ரீகரூவூரார் @ கரூர்.
சித்திரை1,2(கன்னி)=ஸ்ரீகருவூரார் @ கரூர்,ஸ்ரீசச்சிதானந்தர் @ கொடுவிலார்ப்பட்டி.
சித்திரை3,4(துலாம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் @ மாயூரம்
சுவாதி(துலாம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் @ மாயூரம்
விசாகம்1,2,3(துலாம்)=ஸ்ரீநந்தீஸ்வரர் @ காசி,ஸ்ரீகுதம்பைச்சித்தர் @ மயிலாடுதுறை
விசாகம்4(விருச்சிகம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் @ மயிலாடுதுறை,ஸ்ரீவான்மீகர் @ எட்டுக்குடி,ஸ்ரீஅழுகண்ணிசித்தர் @ நீலாயதாட்சியம்மன்கோவில்,நாகப்பட்டிணம்
அனுஷம்(விருச்சிகம்)= ஸ்ரீவான்மீகி @ எட்டுக்குடி, தவத்திரு.சிவஞான குருசாமிகள் என்ற அரோகரா சாமிகள்,தோளூர்பட்டி,தொட்டியம்-621215.திருச்சி மாவட்டம்.
கேட்டை(விருச்சிகம்)=ஸ்ரீவான்மீகி @ எட்டுக்குடி,     ஸ்ரீகோரக்கர் @ வடக்குப் பொய்கைநல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்.
மூலம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி @ ராமேஸ்வரம்,சேதுக்கரை,திருப்பட்டூர்
பூராடம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி  @ ராமேஸ்வரம்,ஸ்ரீசித்ரமுத்துஅடிகளார் @ பனைக்குளம்(இராமநாதபுரம்),ஸ்ரீபுலஸ்தியர் @ ஆவுடையார்கோவில்.

உத்திராடம்1(தனுசு)=ஸ்ரீகொங்கணர் @ திருப்பதி,ஸ்ரீதிருவலம் சித்தர் @ திருவலம்(ராணிப்பேட்டை),ஸ்ரீலஸ்ரீமவுனகுருசாமிகள் @ தங்கால் பொன்னை(வேலூர் மாவட்டம்)
உத்திராடம்2,3,4(மகரம்)=ஸ்ரீகொங்கணர் @ திருப்பதி
திருவோணம்(மகரம்)=ஸ்ரீகொங்கணர் @ திருப்பதி,ஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரால் @ நெரூர்,      ஸ்ரீதிருமூலர் @ சிதம்பரம்,ஸ்ரீகருவூரார் @ கரூர்,        ஸ்ரீபடாஸாகிப் @ கண்டமங்கலம்
அவிட்டம்1,2(மகரம்);அவிட்டம் 3,4(கும்பம்)=ஸ்ரீதிருமூலர் @ சிதம்பரம்(திருமூலகணபதி சந்நிதானம்)
சதயம்(கும்பம்)=ஸ்ரீதிருமூலர் @ சிதம்பரம்,
ஸ்ரீசட்டநாதர் @ சீர்காழி,ஸ்ரீதன்வந்திரி,
ஸ்ரீதன்வந்திரி @ வைத்தீஸ்வரன் கோவில்.
பூரட்டாதி1,2,3(கும்பம்)=ஸ்ரீதிருமூலர் @ சிதம்பரம்,ஸ்ரீதட்சிணாமூர்த்தி @ திருவாரூர்.
ஸ்ரீகமலமுனி @ திருவாரூர்,ஸ்ரீகாளாங்கிநாதர் @ திருவாடுதுறை,சித்தர்கோவில்,சேலம் ஸ்ரீசதாசிவப்ரும்மானந்தஸ்ரீசிவபிரபாகர சித்தயோகி
பரமஹம்ஸர் @ ஓமலூர் & பந்தனம்திட்டா.
பூரட்டாதி4(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் @ மதுரை,ஸ்ரீஆனந்த நடராஜ சுவாமிகள் @  குட்லாம்பட்டி(மதுரை),
பரம்மானந்த ஸ்ரீசித்தயோகி பரமஹம்ஸர்,ஓமலூர்.
உத்திரட்டாதி(மீனம்)=சுந்தரானந்தர் @ மதுரை;ஆனந்த நடராஜ சுவாமிகள் @ குட்லாம்பட்டி(மதுரை),ஸ்ரீமச்சமுனி @ திருப்பரங்குன்றம்.
ரேவதி(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் @ மதுரை,திபாவளிக்கு முந்தையநாள் அன்று குனியமுத்தூர் சுவாமிகள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி
ஆதாரம்:சித்தர் களஞ்சியம்,பக்கம்82,83,84,85.
ஓம்சிவசிவஓம்

கர்மவினையை நீக்கிட ஒரு சுலப வழிமுறை:யோகி கைலாஷ்நாத்


சித்தர்கள் ஜீவசமாதித் தலங்களில் இருக்கும் சித்தரின் உச்சந்தலைக்குமேல்  இயங்கும் துவாதசாங்கச் சக்கரத்துக்கும் வானில் உள்ள நட்சத்திரம்,சூரிய சந்திர மற்றும் நவக்கிரகங்களின் இயக்கத்துக்கும்,12 ராசி மண்டலங்களுக்கும் உள்ள தொடர்பு ஒருபோதும் விலகுவதில்லை;எனவே தான் பிறந்த நட்சத்திரம்,ராசி,லக்னத்துக்கேற்ற ஜீவசமாதிகளுக்குச் சென்று நமது ஆன்மீகக்கடல் வலைப்பூவில் குறிப்பிட்டுள்ள படி வழிபாடு செய்ய வேண்டும்.

பழனிக்கு மாலை போட வேண்டும் என்றோ,காவடி எடுக்க வேண்டும் என்றோ நீ நினைத்தால், பழனியில் நிர்விகல்ப சமாதியிலிருக்கும் போகர் சித்தர் நினைவில் நீ இருக்கிறாய் என்பது அதன் பொருள் ஆகும்.ஜீவசமாதியாய் இருக்கும் சித்தர் நினைவினால் மட்டுமே இது சாத்தியம் ஆகும்.சமாதியில் இருக்கும் சித்தர் நினைத்தால் அவ்விடத்துக்குச் செல்ல முடியும்.
ஜாதகத்தில் தோஷம் இருந்தால் கூட வானியல் தொடர்பு கொண்டு சித்தர் சமாதித் தலங்களுக்குச் சென்று வருவதால் தோஷ விடுதலை கிடைக்கும் என்பது விஷ்ராந்தி யோக நிலையம் செய்த ஆராய்ச்சிகளால் விளங்கும்.

தற்சமயம்,கலிகாலத்தில் கர்மவினைகளின் பயனால் புத்திரதோஷம்,திருமண தோஷம்,தொழில் தடை,தகுதியிருந்தும் வாழ இயலாமை,ஐஸ்வர்யத் தடை, பிணி,நோய்,விபத்துக்களால் அகால மரணம்,கலாச்சாரச் சீரழிவுகளால் சிக்கித் தவிக்கும் இளைய சமுதாயம் இவை எல்லாவற்றிற்கும் சித்தர் வழிபாடும்,வாழ்வியல் கலைகளாகிய யோகம்,தியானம் போன்றன அருமருந்தாகும்.சித்தர்கள் கண்ட அருந்தவயோகத்தைப் பயின்று அருந்தவ யோகிகள் ஆவோம்.

ஒவ்வொரு துறையை எடுத்துக்கொண்டாலும்,அதில் ஜொலிப்பவர்கள் தொடர்ந்து ஜொலித்துக்கொண்டே இருப்பதும்; ஜொலித்துக்கொண்டே இருப்பவர்கள் அதலபாதாளத்தில் விழுந்துவிடுவதும் வானியலோடும்,சோதிடத்தோடும் ,சித்தர் மகான்களின் சாபங்களோடும் தொடர்புடையதுதான்.ஒரு சில குடும்பங்கள் ஆண் வாரிசு இல்லாமல் போவதற்கும்,மற்றும் தனிமனிதனின் சகல தோஷங்களுக்கும் காரணமாக இருப்பதும் வானியல்,சோதிடம்,கர்மா,சித்தர் சாபம் போன்ற இந்த நான்கு மட்டுமே!!

உதாரணமாக கோவையின் ஸ்ரீஅன்னபூர்ணா உணவகங்களும், சென்னையின் ஸ்ரீசரவணபவன் ஹோட்டல்களும்,சென்னை சில்க்ஸ் = சங்கிலித்தொடர் ஜவுளிக்கடைகளும்,அருப்புக்கோட்டையிலிருந்து விருதுநகர் மாவட்டத்தின் போக்குவரத்துத்துறையில் தனி முத்திரை பதிக்கும் ஸ்ரீஜெயவிலாஸ், மதுரையில் பிறந்து சென்னையில் வளர்ந்து ஆசியாவின் இருசக்கர வாகனச்சந்தையைக் கைப்பற்ற விஸ்வரூபமெடுக்கும் டி.வி.எஸ். என்று பல நிறுவனங்களின் தொழில்களைச் சொல்லலாம்.

குண்டலினி சக்தியை எழுப்பியவர்கள் மட்டுமே சோதிடத்தில் வல்லுநர்களாக இருக்க முடியும்.அவர்களால் மட்டுமே சூரியக்குடும்பத்தையும்,நட்சத்திரங்களையும், 12 ராசி வீடுகளையும் ஞானக்கண்ணால் காணமுடியும்.

ஓம்சிவசிவஓம்

சித்தர்களின் சாதிக் கொள்கை:பாடல்களாக விளக்கம்


சாதியொன்றில்லை சமயமொன்றில்லை யென்
றோதி யுணர்ந்தறிவாய் , குதம்பாய்
ஓதி உணர்ந்தறிவாய் (குதம்பைச் சித்தர் பாடல் 145)

ஆண்சாதி பெண் சாதி யாகும் இருசாதி
வீண்சாதி மற்றவெல்லாம் குதம்பாய்
வீண் சாதி மற்ற வெல்லாம்  (குதம்பைச் சித்தர் 137)

பறைச்சியாவ தேதடா பனத்தியாவ தேதடா
இறைச்சிதோ லெலும்பினு மிலக்கமிட்டிருக்குதோ
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுத்துப்பாரு மும்முளே(சிவவாக்கியர் பாடல் 40)
தழைப்பதற்குச் சாதியென்றும் விந்து வென்றும்
தந்தைதாய் பிள்ளையென்றும் பாரியென்றும்
உழைப்பதற்குச் சொன்னதல்லாற் கதிவேறில்லை (அகத்தியர் ஞானம் 4)

காணப்பா சாதிகுலம் எங்கட்கில்லை
கருத்துடனே என்குலம் சுக் குலம்தான் மைந்தா
தொல்லுலகில் நாற்சாதி யனேகஞ் சாதி
தொடுத்தார்கள் அவரவர்கள் பிழைக்கத் தானே         (வான்மீகர் ஞானம் பாடல் 8)

நால்வருணன் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்ற கலைச்சாதியெலாம் பிள்ளை விளையாட்டே
சாதியும் மதமும் சமயமும்  பொய்யென
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி
சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தேன்
சாத்திரக் குப்பையும் தணிந்தேன்(வள்ளலார் திருவருட்பா)

சாதியிலே மதங்களிலே சமயநெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளில் கோத்திர சண்டையிலே
ஆதியிலே அபிமானித்து அலைகின்றீர் உலகீர்

சமயபேதம் பலவான சாதிபேதங்கள்
சமயத்தோர்க் கேயல்லாது சற்சாதுக் களுக்கோ (பாம்பாட்டி சித்தர்)

சாதிபேதம் சொல்லுறீர் தெய்வம்
தான் என்று ஒரு உடல் பேதம் உண்டோ
ஓதியபால் அதில் ஒன்றாகி அதில்
உற்பத்தி நெய்தயில் மோராச்சு(கொங்கணர் வாலைக்கும்மி 94)

சாதிக் கொடுமைகளை எதிர்ப்பதையும்,சாதி வேறுபாடுகள் செய்யும் தொழிலின் அடிப்படையில் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன என்பதையும் சித்தர்களின் பாடல்கள் விளக்குகின்றன.நாம் தான் அறிவாளி சமுதாயமாச்சே! கம்யூட்டர் யுகத்தில் வாழ்பவர்களாச்சே! சாதியை ஒரு ஆயுதமாகப்பயன்படுத்தி,மனித நேயத்தை கொன்றுவிட்டோம்.அப்படிக் கொல்வதற்கு கிறிஸ்தவ ஆங்கிலேயனின் பாடத்திட்டமும் ஒரு காரணமாகிவிட்டது.
ஓம்சிவசிவஓம்